OUR CLIENTS
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைநகரை அரசு ஆதரவு படை கைப்பற்றியது
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைநகரை அரசு ஆதரவு படை கைப்பற்றியது Posted on 11-Aug-2016 லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைநகரை அரசு ஆதரவு படை கைப்பற்றியது

திரிபோலி:
லிபியா நாட்டில் நீண்ட கால அதிபராக இருந்த முகமது கடாபி கொல்லப்பட்டதையடுத்து புரட்சிப் படைகள் ஆட்சியை கைப்பற்றின. ஆனாலும், அங்கு நிலைமை சீராகவில்லை. சில பகுதிகளை அரசுக்கு எதிரான படைகளும், சில பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகளும் கைப்பற்றி வைத்துள்ளனர்.


ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருக்கும் பகுதிகளை கைப்பற்ற அரசு படைகளும், அரசு ஆதரவு படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன. அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டு படைகள் விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துகிறது.

லிபியாவின் கடற்கரையில் உள்ள சிர்த் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் தலைநகரமாக வைத்து இருந்தனர். இதை கைப்பற்ற கடந்த சில வாரங்களாக தொடர்ந்து முயற்சிகள் நடந்து வந்தது.

நகரை சுற்றி வளைத்து அரசு ஆதரவு படைகள் தாக்கின. இதை தாக்கு பிடிக்க முடியாமல் நகரை கைவிட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் பின்வாங்கி ஓடினார்கள்.

இதையடுத்து நகரின் பெரும் பகுதியை அரசு ஆதரவு படைகள் கைப்பற்றி உள்ளன. தற்போது 3 குடியிருப்பு பகுதிகளை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அங்கிருந்தபடி ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குகின்றனர். அவர்களையும் விரட்டியடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

இந்த சண்டையில் அரசு ஆதரவு படையை சேர்ந்த 3 வீரர்கள் உயிர் இழந்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த நகரில் ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருந்ததாகவும் இவர்களில் பெரும்பாலானோர் வேறு இடங்களுக்கு தப்பி சென்று விட்டதாகவும் அரசு தரப்பில் கூறினார்கள்.

இதற்கிடையே அரசு படையின் ராணுவ விமானம் ஒன்றை காணவில்லை. அதை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Label