OUR CLIENTS
மூடிக்கிடக்கும் காவல் உதவி மையம் விழுப்புரம் எஸ்.பி., கவனிப்பாரா?
மூடிக்கிடக்கும் காவல் உதவி மையம் விழுப்புரம் எஸ்.பி., கவனிப்பாரா? Posted on 23-Aug-2017 மூடிக்கிடக்கும் காவல் உதவி மையம்  விழுப்புரம் எஸ்.பி., கவனிப்பாரா?

திண்டிவனம், ஆக.23- 
 திண்டிவனம் அருகே பொதுமக்களின் வசதிக்காக திறந்து வைக்கப்பட்ட, காவல் உதவி மையம் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றது.

திண்டிவனம் அருகே சாரத்திலுள்ள ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில், பொதுமக்களின் வசதிக்காக கடந்த ஏப்ரல் 13ம் தேதி, காவல் உதவி மையம் திறப்பு விழா
நடந்தது. திறப்பு விழாவிற்கு பிறகு, கொஞ்ச காலம் செயல்பட்டு வந்தது.

 என்ன காரணமோ தெரியவில்லை, பல மாதங் களாக காவல் உதவி மையம் செயல்படாமல் பூட்டியே கிடக்கின்றது. இதுபற்றி ஒலக்கூர் போலீசாரிடம் கேட்ட போது,  ஆள்பாற்றாக்குறையால் காவல் உதவி மையம் செயல்படவில்லை என்று தெரிவிக்கின்றனர். மூடிகிடக்கு காவல் உதவி மையம் மீண்டும் செயல்படுவதற்கு, விழுப்புரம் எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா?

Label