OUR CLIENTS
சில்வர் பீச்சில் தூய்மை பணி
சில்வர் பீச்சில் தூய்மை பணி Posted on 23-Aug-2017 சில்வர் பீச்சில் தூய்மை பணி

கடலூர், ஆக.23- 
கடலூரில் சில்வர் பீச்சை தூய்மை செய்யும் பணியை போலீசார் மேற்பார்வையில் மாணவர்கள், பொதுமக்கள் மேற்கொண்டனர். 

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரை தமிழகத்தின் 2வது பெரிய கடற்கரையாக திகழ்கிறது. இதனால் கடலூர் மற்றும் வெளி இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகையும் கடற்கரைக்கு அதிகளவில் வருகின்றனர். 

பொதுவாக விடுமுறை நாட்களில் மக்கள் வரவு அதிகளவில் உள்ள நிலையில் குப்பைகள் தேக்கம் அகற்றப்படாமல் கடற்கரை பகுதி தூய்மையற்ற நிலையில் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், விழுப்புரம் சரக டிஐஜி பாலகிருஷ்ணன், கடலூர் எஸ்பி விஜயகுமார் ஆகியோர் சில்வர் பீச் பகுதியை தூய்மைப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து கடலூர் புதுநகர் சரக போலீசார் சில்வர் பீச் தூய்மை பணியை தொடங்கினர். 

நீதிபதி சுந்தரம் தூய்மை பணியை துவக்கி வைத்தார். டிஎஸ்பி நரசிம்மன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.  

ஊர்காவல் படை போலீசார், கடலூர் சிறகுகள் அமைப்பு, புனித வளனார் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.

தூய்மை பணியை தொடர்ந்திடவும், சில்வர் பீச் வருகை தரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுநகர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Label