OUR CLIENTS
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வருமா?
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வருமா? Posted on 23-Aug-2017 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வருமா?

திருப்போரூர், ஆக.23- 
 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., அவ்வப்போது தங்கி சென்ற, சிறுதாவூர் அமைந்துள்ள திருப்போரூர் தொகுதியில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஏற்படுத்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உயிருடன் இருக்கும் போது, சென்னையை ஒட்டிய திருப்போரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட விரும்பினார்.

திட்டங்கள் அறிவிப்பு இதற்காக, 1977ம் ஆண்டு முதல், 2006 வரை, தனி தொகுதியாக இருந்த திருப்போரூர் தொகுதி, எல்லைகள் மறு சீரமைக்கப்பட்டு, பொது தொகுதியாக, 2011ல் அறிவிக்கப்பட்டது.

 ஆனால், அச்சமயத்தில் ஜெ., திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு முதல்வரானார். அதையடுத்து, அத்தொகுதிக்கு பல நூறு கோடி ஒதுக்கி, பல திட்டங்களை அறிவித்தார்.

அதுபோல, திருப்போரூர் தொகுதிக்கும் தாலுகா அந்தஸ்து, தொழிலாளர் தங்கும் இடம், மாமல்லபுரம் அருங்காட்சியகம், சிறுசேரி வாகன நிறுத்தம், மேலக்கோட்டையூர் விளையாட்டு பல்கலை கழகம்.

மேலும், தையூரில் அண்ணா பல்கலைகழக ஆராய்ச்சி மையத்திற்கு இடம் ஒதுக்கீடு, 3,500 காவலர்களுக்கான சொந்த வீடுகள் உள்ளிட்ட பிரமாண்ட திட்டங்களை செயல்படுத்தினார்.

மேலும், அவர் அவ்வப்போது, திருப்போரூர் தாலுகாவில் உள்ள சிறுதாவூரில் தங்கி சென்றதால், இந்த பகுதிக்கு கூடுதல் மவுசு ஏற்பட்டது.

சிறுதாவூரிலிருந்து தண்டலம், திருப்போரூர், கோவளம் வழியாக விரும்பி பயணித்ததால், இப்பகுதிகளுக்கு தனி மவுசு ஏற்பட்டது. தற்போது, அவர் மறைந்த நிலையில், திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

இதற்காக, சிறு அமைப்புகளும் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து கூட்டங்கள் நடத்துகின்றன. இப்பகுதியில், மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஏற்படுத்த தேவையான அரசு சார்ந்த இடங்களும், அறநிலையத்துறையை சார்ந்த இடங்களும் அதிகளவில் உள்ளதால், ஆட்சியாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளத.

கோரிக்கை ஜெ., தங்கி சென்ற இப்பகுதியில் அவரின் நினைவுகள் நீங்கா இடம் பெறவும், ஏழை எளிய மாணவ மாணவியர் மற்றும் பொது மக்கள் பயன் பெறும் விதத்திலும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும் என, திருப்போரூர் தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label