OUR CLIENTS
‘இறைச்சிக்காக இளங்கன்று வெட்டுவதை தடுக்கணும்‘
‘இறைச்சிக்காக இளங்கன்று வெட்டுவதை தடுக்கணும்‘ Posted on 23-Aug-2017 ‘இறைச்சிக்காக இளங்கன்று வெட்டுவதை தடுக்கணும்‘

ஈரோடு, ஆக.23- 
 இறைச்சிக்காக இளங்கன்றுகள், வெட்டுவதை தடுக்க வேண்டும், என்று பா.ஜ., தீர்மானம் நிறைவேற்றியது.

ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., வீரப்பன்சத்திரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

 மாநகராட்சி இரண்டாவது வார்டு ராஜீவ் நகரில், சாக்கடை வசதி கேட்டு, மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுப்பது, இல்லாத பட்சத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

மாநகராட்சி ஐந்து, ஆறாவது வார்டு அக்ரஹாரம் பகுதியில், சாலையோரங்களில் மாமிசத்துக்காக இளங்கன்றுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். 

15வது வார்டு கிருஷ்ணம் பாளையம், 13வது வார்டு சின்னப்பா லேஅவுட் பகுதிகளில், டாஸ்மாக் கடைகளால் தொல்லை ஏற்படுகிறது. இவற்றை அகற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

Label