OUR CLIENTS
சென்னிமலையில் 50 மில்லி கழுதை பால் ரூ.100க்கு விற்பனை
சென்னிமலையில் 50 மில்லி கழுதை பால் ரூ.100க்கு விற்பனை Posted on 23-Aug-2017 சென்னிமலையில் 50 மில்லி  கழுதை பால் ரூ.100க்கு விற்பனை

 சென்னிமலை, ஆக.23- 
 சென்னிமலையில், கழுதைப்பால் விற்பனை,  அமோகமாக நடந்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் ஒரு கழுதை, குட்டியுடன், சென்னிமலைக்கு நேற்று வந்தார். கழுதை பால், கழுதை பால் என கூவிக் கூவி அழைத்தார்.

மஞ்சள் காமாலை, சொரி, சிரங்கு, சளி தொல்லை உள்ளிட்ட நோய்களுக்கு, கழுதை பால் குடித்தால் குணமாகும் என கூறினார். 

பால் கேட்டவர்களுக்கு, அவர்கள் கண் முன்னே, சுடச்சுட கறந்து கொடுத்தார். 50 மில்லி பாலுக்கு, கட்டணமாக, 100 ரூபாய் வசூலித்தார். தொகை பற்றிக் கவலைப்படாமல், பலர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். 

சென்னிமலை டவுன் பகுதி மற்றும் அம்மாபாளையம், அண்ணா நகர், ஈங்கூர் ரோடு, பிடாரியூர், திருநகர் ஆகிய பகுதிகளுக்கு சென்ற அவரிடம், பலர் போட்டி போட்டு பால் வாங்கினர்.

மருத்துவ உலகம் எவ்வளவு முன்னேறினாலும், கழுதை பாலுக்கு மவுசு இருக்கத்தான் செய்கிறது என்று, பலர் பேசிக் கொண்டனர்.உண்மையில் கழுதை பாலுக்கு மருத்துவ தன்மை உள்ளதா? என, சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து சென்னிமலை அரசு சித்த மருத்துவர் பத்மாவதி கூறியதாவது: கழுதை பாலுக்கு மருத்துவ தன்மை உள்ளது, எனபது உண்மை தான்.

வாதநோய், கரப்பான், புண், தழுதளை ரோகம், உள்வித்திரக்கட்டி, ஒட்டுக்கிரந்தி, சீழ்ப்பிரமேகம், சொரி, சிரங்கு, கட்டி, கருங்கிரந்தி, சித்தபிரமை, பித்த தோஷம், கபநோய் இவைகளை போக்க வல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Label