OUR CLIENTS
கழிவுநீர் சுகாதாரமே இல்லாத சுயராஜ்யபுரம் அமைச்சர் தொகுதியில் அவலம்!
கழிவுநீர் சுகாதாரமே இல்லாத சுயராஜ்யபுரம் அமைச்சர் தொகுதியில் அவலம்! Posted on 23-Aug-2017 கழிவுநீர் சுகாதாரமே இல்லாத  சுயராஜ்யபுரம் அமைச்சர் தொகுதியில் அவலம்!

மதுரை, ஆக.23- 
மதுரை சுயராஜ்யபுரத்தில் சுகாதாரம் என்பது கொஞ்சம்கூட இல்லாத நிலை காணப்படுகிறது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மேற்குதொகுதிக்குள் உள்ளது சுயராஜ்யபுரம். இப்பகுதி அமைச்சர் வீட்டின் அருகே இருப்பதால் அடிப்படை வசதிகள் அதிகளவில் சிறப்பாக செய்யப்பட்டிருக்கும் என்று நினைத்து விடக்கூடாது. 

அதற்கு மாறாகத்தான் சுயராஜ்யபுரத்தின் நிலை இருந்து வருகிறது. இங்கு சுகாதாரம் என்பது சுத்தமாக இல்லை. தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள பாதாளசாக்கடையின் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறிய வண்ணம் இருந்து வருகிறது. கழிவுநீர் அப்படியே சாலைகளில் தேங்கி நிற்கிறது. 

பல ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதை மாநகராட்சி கண்டுகொள்ளவே இல்லை என இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். மேலும் குப்பைத்தொட்டி வைக்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. 

குப்பையை அகற்றுவதே கிடையாது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் உருவாகும் அபாயம் இருந்து வருகிறது. ஏற்கெனவே இந்தப் பகுதியில் டெங்கு பாதிப்பு இருந்து வந்தது. 

இது தெரிந்தும் மாநகராட்சி அலட்சியமாக உள்ளது. பாதாள சாக்கடை உடைந்து சாலையில் கழிவுநீர் தேங்குவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label