OUR CLIENTS
பஸ்களில் லேப்& டாப் திருட்டு புகார்களை பெற மறுக்கும் போலீசார்!
பஸ்களில் லேப்& டாப் திருட்டு புகார்களை பெற மறுக்கும் போலீசார்! Posted on 23-Aug-2017 பஸ்களில் லேப்& டாப் திருட்டு புகார்களை பெற மறுக்கும் போலீசார்!

சேலம், ஆக.23- 
பெங்களூரு, சென்னையில் பணியாற்றும், சாப்ட்வேர் இன்ஜினியர்களை குறி வைத்து, லேப் - டாப், மொபைல் போன்களை திருடும் கும்பல், பஸ்களில் தொடர்ந்து கைவரிசை காட்டுகிறது.

இது குறித்த புகார்களை வாங்க போலீசார் மறுப்பதால், இளைஞர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

தென் மாவட்டங்களை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள், சேலம் வழியாக பெங்களூருக்கும், கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள், பெங்களூரு, சென்னைக்கு, சேலம் வழியாக பஸ்களில் செல்கின்றனர்.

சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், வார விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு, அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் பஸ்களில் சென்று வருகின்றனர்.

பெரும்பாலும் இந்த பஸ்கள், நள்ளிரவு நேரத்தில், சேலம் வருகின்றன. பஸ் ஸ்டாண்டில், 15 முதல், 30 நிமிடங்கள் நின்று செல்கின்றன. 

இளைஞர்கள், டீ குடிக்க, இயற்கை உபாதையை கழிக்க எழுந்து செல்லும் போதும், பஸ்கள் நிற்பது தெரியாமல் அயர்ந்து தூங்கும் போதும், அவர்களின் உடைமைகள் திருடப்படுகின்றன.

குறிப்பாக, சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பயன்படுத்தும் விலை உயர்ந்த லேப் - டாப், மொபைல் போன்கள் திருடப்படுகின்றன. 

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில், இந்த திருட்டில், பெரிய கும்பல் ஈடுபட்டு வருகிறது. பொருட்களை இழக்கும் இன்ஜினியர்கள், சேலத்தில் நள்ளிரவு முதல், அதிகாலை வரை, என்ன செய்வது என, தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.புகார் அளிக்க, பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றால், அங்கு புகாரை வாங்க மறுத்து விடுகின்றனர். 

அதே நேரம், பொருட்களை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள், மீண்டும் லேப் - டாப் பெற முடியாலும், நிறுவனங்களுக்கு பதில் சொல்ல முடியாமலும், லேப் - டாப் பேக்கில் இருந்த ஆவணங்களை மீண்டும் பெற முடியாமல் தவிக்கின்றனர். 

போலீசார் புகார் வாங்க மறுப்பதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திருட்டு கும்பல், சர்வ சாதாரணமாக, சேலம் புது பஸ் ஸ்டாண்டில் உலா வருகிறது.

அவர்களை பிடிக்க, போலீஸ் உயர் அதிகாரிகள், தனிப்படை அமைக்க வேண்டும் என, பஸ் பயணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Label