OUR CLIENTS
எரிந்த நிலையில் பெண் உடல் மீட்பு!
எரிந்த நிலையில் பெண் உடல் மீட்பு! Posted on 23-Aug-2017 எரிந்த நிலையில் பெண் உடல் மீட்பு!

வாணியம்பாடி, ஆக.23- 
வாணியம்பாடியில் தனி நபருக்குச் சொந்தமான காலி மனையில் எரிந்த நிலையில் பெண் உடல் மீட்கப்பட்டது.

வாணியம்பாடி நேதாஜி நகர் மின்வாரிய அலுவலகம் அருகே வசித்து வந்தவர் மகாலட்சுமி (59). இந்நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் அங்குள்ள தனி நபருக்குச் சொந்தமான காலி வீட்டு மனையில் எரிந்த நிலையில் அவர் சடலமாகக் கிடந்தார். 

சடலத்தின் அருகே மண்ணெண்ணெய் கேன் இருந்தது. தகவலறிந்த வாணியம்பாடி நகர போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாணியம்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Label