OUR CLIENTS
அதிமுக அரசு தொடரக் கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்!
அதிமுக அரசு தொடரக் கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்! Posted on 23-Aug-2017 அதிமுக அரசு தொடரக் கூடாது என்பதில்  மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்!

சென்னை, ஆக.23- 
மக்கள் பிரச்சினைகள் எதையுமே தெரிந்து கொள்ளாமல் அதிமுக அரசு செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஆட்சி தொடரக் கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘’எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்று சொன்னவர் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக,- அமைச்சராக இருந்தபோதுதான் சேகர் ரெட்டியையும், ஊழலையும் அறிமுகப்படுத்தியவர் என்றவர் எடப்பாடி பழனிசாமி. 

இப்போது இரண்டு ஊழல் சாம்ராஜ்ஜியங்களை நடத்திக் கொண்டிருக்கும் அந்த இருவரும் இணையக் கூடிய சூழ்நிலை வந்திருக்கிறது. அதைத்தான் நாங்கள் ஏற்கெனவே, இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொன்னோம். அந்த நிலைதான் இன்று இருக்கிறது. இந்தக் கொடுமைகளை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கான தீர்ப்பை வரும் காலகட்டத்தில் மக்கள் தெளிவாக வழங்குவார்கள். மக்கள் பிரச்சினைகள் எதையுமே அவர்கள் தெரிந்து கொள்ளாமல் இப்படியெல்லாம் செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஆட்சி தொடரக் கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். எனவே, சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற அவசியமில்லை’’ என்று ஸ்டாலின் கூறினார்.

Label