OUR CLIENTS
பேர்ணாம்பட்டு பணிமனையில் பணிபுரியும் நடத்துனரின் அராஜக செயல்:நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்!
பேர்ணாம்பட்டு பணிமனையில் பணிபுரியும் நடத்துனரின் அராஜக செயல்:நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்! Posted on 23-Aug-2017 பேர்ணாம்பட்டு பணிமனையில் பணிபுரியும் நடத்துனரின்  அராஜக செயல்:நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்!

குடியாத்தம், ஆக.23- 
பேர்ணாம்பட்டு பணிமனையில் பணிபுரியுந்து கொண்டு அராஜக செயலில் ஈடுபடும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்பார்களா ? அதிகாரிகள் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

பேர்ணாம்பட்டு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் நடத்துனர் திருஞானம். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேர்ணாம்பட்டு செல்லும் அரசு பேருந்து 84 சர்வீஸ் டி.என்.23&என்&1941 என்ற பேருந்தில் ஏறியுள்ளார். 

அப்போது காலை சுமார் 9:30 மணியளவில் பேருந்தில் ஏறிய அவர் சக பயணிகள் 3 பேர் உட்காரும் இருக்கை முழுவதையும் ஆக்கிரமித்து பிடித்துக்கொண்டு பள்ளி கொண்டு உறங்கியபடி பயணித்து வந்தார். இதை பார்த்த சக பேருந்து பயணிகள் கேட்டால் நான் அரசு பேருந்தின் நடத்துனராக பணிபுரிகிறேன். 

எனக்குதான் இந்த பேருந்தில் முன்னுரிமை என்று தெனாவட்டாக பேசியுள்ளாராம். இதுகுறித்து நியாயம் கேட்டால் உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் பதில் கூறியுள்ளார் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே அரசு பேருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவா அல்லது பேருந்தில் பணிபுரியும் நடத்துனரின் பயன்பாட்டுக்காகவா என்பது புரியாத புதிராக உள்ளது.
  
 அதேபோல் நடத்துனர் திருஞானம் தான் இருக்கும் வீட்டுக்கு பேர்ணாம்பட்டில் இருந்து( கவுராபேட்டை ) செல்ல வேண்டும் என்றால் பேர்ணாம்பட்டில் இருந்து சென்னை செல்லும் விரைவு பேருந்து (டிஎஸ்எஸ்) மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ஏறிக்கொண்டு ஒட்டுநார்களையும், நடத்துனர்களையும் மிரட்டி தனது வீட்டு வாசலில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்றும் கட்டாயப்படுத்து அராஜக செயலில் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.  
 
இது ஏனென்றால் இவர் இருக்கும் ஊருக்கு (கவுராப்பேட்டை) பஸ் நிறுத்தம் கிடையாது. அதேபோல் தான் இறங்கும் இடத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்லும் ஒட்டுநர்களை மிரட்டி எனக்கு வேலூர் விழுப்புரம் கோட்டம் 2 டில் அலுவலகத்தில் எனக்கு சில ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் சொல்லி உங்களையெல்லாம் தொலைத்து விடுவேன் என்றும் மிரட்டியும் வருகிறார் என்று கூறப்படுகிறது. 

இதுதவிர இவர் பேருந்தில் நடத்துனராக பணிபுரியும் நேரத்தில் பயணிகளை சில்லரை இருந்தால் மட்டும் பஸ்சில் ஏறுங்கள், இல்லை என்றால் போ தூரம் என்று தரக்குறைவாக பேசுகிறார் என்று பஸ் பயணிகள் மத்தியில் கூறி வருகின்றனர். இதனால் அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பது வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

நடத்துனர் திருஞானம் அதேபோல் அராஜக செயலிலும் ஈடுபடுவதாகவும், பொதுமக்களும், சமூக அர்வலர்களும் கூறிவருகின்றனார். எனவே இதுபோல் அராஜக செயலில் ஈடுப்படும் பேருந்தின் சீட்டில் உறங்கி வரும் நடத்துனர் திருஞானம் மீது விழுப்புரம் கோட்டம் 2ன் மேலாளர் வேலூர் ரமேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்பாக உள்ளது. மண்டல அலுவலகத்தில் நடத்துநர் திருஞானம் மீது என்னதான் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label