OUR CLIENTS
காஞ்சிபுரம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்!
காஞ்சிபுரம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்! Posted on 23-Aug-2017 காஞ்சிபுரம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்!

காஞ்சிபுரம், ஆக.23- 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாட்சியர் அலுவலகங்களில் பிரதான கோரிக்கைகள் முன்வைத்து வேலை நிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். 

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும். அதுவரை 1.1.2016 முதல் இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும்.

 சிறப்பு காலமுறை தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் போன்ற எண்ணற்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். குறிப்பாக திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். முதலில் காலை 10 மணிக்கு சங்க பொருப்பாளர்கள்  வட்டாட்சியர் அலுவலகத்தை மூடினர். 

பின்பு உள் நுழைவு வாயிலையும் மூடி அனைத்து அரசு ஊழியர்களும் மண் தரையில் அமர்ந்து வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 2 மணி நேரம் சங்க முக்கிய பொருப்பாளர்கள் ஆற்றிய உரையை கேட்டனர். கடைசி நிகழ்வாக உடனடியாக அரசு எங்கள் சங்கத்தை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். 

இல்லையேல் நாங்கள் சொல்லியபடி 26.08.2017 மற்றும் 27.08.2017 தேதிகளில் மாவட்ட அளவிலான வேலைநிறுத்த ஆயத்த மாநாடுகளை நடுத்த வேண்டியிருக்கும். இறுதியாக 07.09.2017 முதல் தமிழகத்தின் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் முடங்கும் வகையிலான காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்துவது என்றும் திறக்க மறுக்கும் அரசின் இதயக் கதவுகளை திறக்க வைப்போம்! வென்றே தீருவோம் என்று சபதம் எடுத்துக்கொண்டனர். 

Label