OUR CLIENTS
விளையாட்டு துறையில் சாதனை புரிந்த வீரர்களுக்கு விருதுகள்!
விளையாட்டு துறையில் சாதனை புரிந்த வீரர்களுக்கு விருதுகள்! Posted on 30-Aug-2017 விளையாட்டு துறையில் சாதனை புரிந்த வீரர்களுக்கு விருதுகள்!

புதுடெல்லி, ஆக.30-
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்ட 3 தமிழக வீரர்களுக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்- & வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.    இந்த ஆண்டுக்கான விருதுகள் பட்டியலை, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.  

இந்த ஆண்டுக்கான விருது பெறத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நேற்று விருதுகளை வழங்கினார்.  குடியரசு தலைவர் மாளிகையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், துரோணாச்சாரியா மற்றும் தயான்சந்த் விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

தமிழகத்தை சேர்ந்த  சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு கடந்த ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 

2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் திருவண்ணாமலை போளூரைச் சேர்ந்த வெள்ளிப் பதக்கம் வென்ற அந்தோணி அமல்ராஜ், 
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற ராஜீ ஆரோக்கியா ஆகிய தமிழக வீரர்களுக்கும் அர்ஜுனா விருதுகள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார். 
பேட்மிண்டன் பயிற்சியாளர் ஜி.எஸ்.எஸ்.வி. பிரசாத்துக்கு துரோணாச்சார்யா விருதை குடியரசு தலைவர் வழங்கினார்.

ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுடன் ரூ. 7.5 லட்சமும், துரோணாச்சாரியார், தயான் சந்த் மற்றும் அர்ஜூனா விருதுடன் ரூ. 5 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

அர்ஜூனா விருது பெற்றவர்கள் விவரம்
சட்டீஸ்வர் புஜாரா (கிரிக்கெட்)
ஹர்மன்ப்ரீத் கவுர் (கிரிக்கெட்)
மாரியப்பன் (ரியோ-பாரா தடகளம்)
வருண் சிங் பட்டி (பாரா தடகளம்)
எஸ்.வி.சுனில் (ஹாக்கி)
சத்யவிரத காடியான் (மல்யுத்தம்)
வி.ஜே.சுரேகா (வில்வித்தை)
குஷ்பிர் கவுர் (தடகளம்)
அரோக்கிய ராஜீவ் (தடகளம்)
லைஷ்ராம் தேபேந்த்ரோ சிங் (குத்துச்சண்டை)
பிரசாந்தி சிங் (கூடைப்பந்து)
சாகேத் மைனனி (டென்னிஸ்)
ஓ.அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்)
பி.என்.பிரகாஷ் (துப்பாக்கிச் சுடுதல்)
ஜஷ்விர் சிங் (கபடி)
எஸ்.எஸ்.பி.சவ்ராசியா (கோல்ப்)
ஒய்னம் பெம்பெம் தேவி (கால்பந்து)

துரோணாச்சார்யா விருது பெற்றவர்கள் விவரம்
ரோஷன் லால் (மல்யுத்தம்)
சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கிச் சுடுதல்)
பிரிஜ் பூஷண் மொகந்தி (குத்துச்சண்டை)
சிஎஸ்எஸ்வி பிரசாத் (பேட்மிண்டன்)
ஹீரா நந்த் கடாரியா (கபாடி)
மறைந்த டாக்டர் ஆர்.காந்தி (தடகளம்)
பி.ஏ.ரபேல் (ஹாக்கி)

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது:
தேவேந்திர ஜாஜாரியா (பாரா தடகளம்)
சர்தார் சிங் (ஹாக்கி)
தயான்சந்த் விருது: சையத் ஷாகீத் ஹகீம் (கால்பந்து)
சுமராய் டீடே (ஹாக்கி)
புபேந்திர சிங் (தடகளம்), 
விருது பெற்ற வீரர்களுக்கு முதல்வர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

Label