OUR CLIENTS
பாஜகவின் அச்சுறுத்தலுக்கு அதிமுக பலியாகக் கூடாது - தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி பேட்டி
பாஜகவின் அச்சுறுத்தலுக்கு அதிமுக பலியாகக் கூடாது - தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி பேட்டி Posted on 30-Aug-2017 பாஜகவின் அச்சுறுத்தலுக்கு அதிமுக பலியாகக் கூடாது - தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி பேட்டி

சென்னை, ஆக.30-
பாஜகவின் அச்சுறுத்தலுக்கு அதிமுக பலியாகக்கூடாது என கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் தெரிவித்தனர்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த நிலையில் தினகரன் அணி தனியாக செயல்பட்டு வருகிறது.

இப்போதைய அரசியல் சூழலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக  அ.தி.மு.க கூட்டணி கட்சி எம்.எல் ஏ.க்களான  கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில்  நேற்று காலை ஆலோசனை நடத்தினார்கள்.

ஆலோசனைக்குப் பிறகு 3 எம்.எல்.ஏக்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:  பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வர் பழனிசாமி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை அழைத்துப் பேச வேண்டும் . தேவைப்பட்டால் அமைச்சர் பதவி தரலாம். பாஜகவின் அச்சுறுத்தலுக்கு அதிமுக பலியாகக்கூடாது. சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் பட்சத்தில், யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து பின்னர் முடிவு செய்வோம். 
அதிமுக தலைவர்களாக யார் வரவேண்டும் என்பதை தொண்டர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். திராவிடக் கட்சிகளை குறிவைத்து அடிக்கும் நோக்கில் பா.ஜ.க. செயல்படுகிறது என தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.

சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்குவது மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தும். கட்சியிலிருந்து தினகரனை நீக்குவதும் சரியான முடிவு அல்ல. முதல்வர் பழனிசாமி தினகரனை அழைத்துப் பேச வேண்டும்  என கருணாஸ் கூறினார்.  தனியரசுவும் இதே வாதங்களை வலியுறுத்திப் பேசினார். பேட்டி அளித்த பின்னர் மூவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க தலைமைச் செயலகம் புறப்பட்டுச் சென்றனர். 

பின்னர் பேரறிவாளனை பரோலில் விடுவித்ததற்காக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் நன்றி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினையும் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Label