OUR CLIENTS
இபிஎஸ்& ஓபிஎஸ்- இரட்டை இலை சின்னத்தை மீட்க முடியாது!
இபிஎஸ்& ஓபிஎஸ்- இரட்டை இலை சின்னத்தை மீட்க முடியாது! Posted on 30-Aug-2017 இபிஎஸ்& ஓபிஎஸ்- இரட்டை இலை சின்னத்தை மீட்க முடியாது!

திருவாரூர், ஆக.30-
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்தால் இரட்டை இலை சின்னத்தை மீட்க முடியாது என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறினார்.

அ.தி.மு.க. அம்மா அணி பொது செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று குடவாசல் அருகே உள்ள அரசவனங்காட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தால் மீட்க முடியாது.

சின்னத்தை மீட்பது என்பது தீராத பிரச்சனை. வாழ்வாதார பிரச்சனை குறித்து பேச அனைத்து கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும்.  நாஞ்சில் சம்பத் வரம்பு மீறி பேசவில்லை. மக்கள் பிரச்சனைக்காக எதிர் கட்சிகள் போராடும் போது அதற்கு ஆதரவாக குரல் கொடுப்போம். எங்களிடம் 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

குட்கா பிரச்சனையில் சபாநாயகர் இருக்கும் போது துணை சபாநாயகர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்?.   நமது எம்.ஜி.ஆர், ஜெயா டி.வி.யை எங்களிடம் இருந்து யாரும் கைப்பற்ற முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

Label