OUR CLIENTS
கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள்.. ஆட்சியை அசைக்க கூட முடியாது...! எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் முழக்கம்...
கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள்.. ஆட்சியை அசைக்க கூட முடியாது...! எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் முழக்கம்... Posted on 31-Aug-2017 கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள்.. ஆட்சியை அசைக்க கூட முடியாது...! எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் முழக்கம்...

சென்னை, ஆக.31-
அதிமுகவை பாதுகாக்க தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்புவிடுத்துள்ளார். 

நிகழ்ச்சியில், எம்ஜிஆர் அஞ்சல் தலையை முதல்வர் பழனிசாமி வெளியிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். 

துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்ற இந்த விழாவில், தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: பகுத்தறிவு முளைத்தது ஈரோட்டில் என்றால் அது துளிர்விட்டு வளர்ந்தது காஞ்சிபுரத்தில்தான். தமிழனை சுயமாக சிந்திக்க வைத்த பெருமை பெரியாரையும், அண்ணாவையும் சேரும். சுயநலத்துக்காக அதிமுகவை கூறுபோட அனுமதிக்க முடியாது. ஜெயலலிதா வழியில் செல்லும் அதிமுக ஆட்சி மேலும் வலிமை அடையும். சிலர் கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள் அது ஒருபோதும் நடக்காது. எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். எனவே இந்த ஆட்சியை யாரும் அசைக்க முடியாது. ஆட்சியையும், கட்சியையும் காக்க நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். எந்த சக்தியாலும் எங்களை ஒடுக்க முடியாது. இவ்வாறு பேசிய பழனிச்சாமி, எம்ஜிஆர் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்தார்.

இதேபோன்று துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியதாவது:  தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருப்பது ஜெயலலிதாவின் நல்லாட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா, லட்சியங்களை நிறைவேற்றும் ஆட்சி இது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்கொள்ளும் கேடயமாக, தாக்கும் ஆயுதமாக வழிகாட்டுவது எம்ஜிஆர், ஜெயலலிதாதான். எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆசி இருக்கும்வரை இந்த பொற்கால ஆட்சி தொடரும். இந்த எஃகு கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை, ஊழல் ஆட்சிக்கு இடமில்லை. எங்களை நம்பியவர்கள் கெட்டுப்போகமாட்டார்கள், கெட்டுப்போக விடமாட்டோம். இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும், பாரதிக்கு பிறகு பாடல் மூலமே சமூகத்தை திருத்தியவர் எம்ஜிஆர் என்றெல்லாம், எம்ஜிஆர் குறித்த புகழ்களை பேசியமர்ந்தார் பன்னீர்செல்வம். 

முதல்வர் இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Label