OUR CLIENTS
நீதிமன்றத்தை தி.மு.க. அரசியல் ஆடுகளமாக மாற்றுகிறது! நீதிபதி கடும் கண்டனம்
நீதிமன்றத்தை தி.மு.க. அரசியல் ஆடுகளமாக மாற்றுகிறது! நீதிபதி கடும் கண்டனம் Posted on 31-Aug-2017 நீதிமன்றத்தை தி.மு.க. அரசியல் ஆடுகளமாக மாற்றுகிறது!  நீதிபதி கடும் கண்டனம்

சென்னை, ஆக.31-
சென்னை உயர்நீதிமன்றத்தை அரசியல் ஆடுகளமாக மாற்ற தி.மு.க.வினர் முயற்சிக்கின்றனர் என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டசபை தொகுதியில் உள்ள கச்சராயன்பாளையம் ஏரியை தி.மு.க.வினர் தூர் வாரினார்கள். இதை பார்வையிட கடந்த ஜூலை 27-&ந் தேதி தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்றார்.  அப்போது அவரை கோவை மாவட்டத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதே நாளில் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

போலீசாரின் இந்த செயலை கண்டித்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, ‘எதிர்கட்சித் தலைவரை இவ்வாறு போலீசார் தடுத்து நிறுத்தியது சரியான நடைமுறையில்லை’ என்று கருத்து தெரிவித்தார்.  பின்னர், ‘தமிழகம் முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் தூர்வாரியுள்ள ஏரி, குளங்களை பார்வையிட மு.க.ஸ்டாலின் சென்றால், அவரை போலீசார் தடுக்கக்கூடாது. அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும். அதேபோல, ஏரி, குளங்களை பார்வையிட செல்வதற்கு முன்பு,

சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் மனித சங்கலி போராட்டம் கடந்த ஜூலை 27-ந்தேதி நடத்தப்பட்டது. மு.க.ஸ்டாலின், சேலத்தில் நடைபெறும் இந்த போராட்டத்தில் கலந்துக் கொள்ள சென்றார். ஆனால், மனித சங்கலி போராட்டத்தில் கலந்துக் கொள்ள மு.க.ஸ்டாலினுக்கு தடை விதித்து கடந்த ஜூலை 26-ந் தேதி சேலம் உதவி போலீஸ் கமி‌ஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி ரமேஷ் விசாரித்தார். அப்போது, இந்த வழக்கை தொடர்ந்த தி.மு.க.விற்கும், மு.க.ஸ்டாலினுக்கும் கண்டனம் தெரிவித்தார்.  ‘ஏற்கனவே ஒரு ரிட் வழக்கை இதே ஐகோர்ட்டில் உத்தரவினை பெற்று விட்டு, மீண்டும் ஒரு மனுவை இந்த ஐகோர்ட்டில் தொடரலாமா?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-  மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பான மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துக் கொண்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், போராட்டத்தில் கலந்துக் கொள்ள தடை விதிக்கும் விதமாக கடந்த மாதம் 26-ந் தேதி போலீசார் உத்தரவிட்டனர். கைது செய்தனர். தற்போது, அவரை விடுதலை செய்து விட்டனர். எனவே, இந்த வழக்கே செல்லத்தக்கது அல்ல’ என்று இந்த வழக்கில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ராஜரத்தினம் வாதிட்டார்.

ஆனால், தூர்வாரப்பட்ட ஏரியை பார்வையிட சென்ற மு.க.ஸ்டாலினை போலீசார் தடுத்து கைது செய்து விட்டனர் கூறி, இந்த ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் ஏற்கனவே ஒரு ரிட் வழக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டு, மு.க.ஸ்டாலினையும், அவருடன் செல்பவர்களையும் போலீசார் தடுக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது.

இப்போது அந்த நிலைப்பாட்டை மாற்றி, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துக் கொள்ள சென்ற தன்னை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து விட்டனர் என்று மற்றொரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இந்த செயலை ஏற்க முடியாது. இதுபோல வழக்கை தொடர்ந்து, இந்த ஐகோர்ட்டை அரசியல் ஆடுகளமாக மாற்ற தி.மு.க.வினர் முயற்சிக்கின்றனர். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.  இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Label