OUR CLIENTS
அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ் - டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை முதல்வர் துவக்கி வைப்பு.
அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ் - டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை முதல்வர் துவக்கி வைப்பு. Posted on 02-Sep-2017 அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ் - டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை முதல்வர் துவக்கி வைப்பு.

சென்னை, செப்.2-
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று வெள்ளிக்கிழமையன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கினார். 

சென்னை,  நுங்கம் பாக்கத்தில் உள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு சேவைக்கான விறிணிநி 4 தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தப்பட்ட கட்டுப்பாட்டு அறையையும் முதல்வர்  திறந்து வைத்தார். டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையையும் முதல்வர் துவக்கி வைத்தார்கள். 

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டுமென்று தொடர்ந்து ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியதன் காரணமாக, மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு 17.4.2017 அன்று டிஜிட்டல் உரிமம் வழங்கி ஆணையிட்டது. இந்தியாவிலேயே மாநில அரசின் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். தரமுள்ள டிஜிட்டல் ஒளிபரப்புக்கான தொழில்நுட்ப மேம்பாட்டுடன் விறிணிநி 4 தொழில் நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை, நுங்கம் பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறை விறிணிநி 2 தொழில் நுட்பத்திலிருந்து விறிணிநி 4 தொழில்நுட்பத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களுக்கு வழங்கிய பின்பு சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து அந்த செட்டாப் பாக்ஸ்கள் செயலாக்கம் செய்யப்படும்.

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களை நேரில் சந்தித்து, வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, செட்டாப் பாக்ஸ்களை வழங்கி, அதற்கு இணைப்பு கொடுப்பது. மேலும், அதனை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள ஏதுவாக, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ஒவ்வொரு இணைப்பிற்கும் ரூ. 200/- (ரூபாய் இருநூறு மட்டும்) ஒரு முறை செயலாக்கத் தொகையாக  சந்தாதாரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஷிtணீஸீபீணீக்ஷீபீ ஞிமீயீவீஸீவீtவீஷீஸீ (ஷிஞி) சேனல் தொகுப்புகள் (சிலீணீஸீஸீமீறீ றிணீநீளீணீரீமீs) அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டு, நான்கு தொகுப்புகளாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு தொகுப்பிலும் 158 இலவசச் சேனல்களைக் காணலாம். கட்டணச் சேவை தொகுப்புக்கு மாதந்தோறும் ரூ. 125 கட்டணம் செலுத்த வேண்டும்.

கட்டணச் சேனல் 72 எண்ணிக்கை கொண்ட தொகுப்புக்கு ரூ 175ம்,
கட்டணச் சேனல் 102 எண்ணிக்கை கொண்ட தொகுப்புக்கு ரூ 225ம்,
கட்டணச் சேனல் 142 எண்ணிக்கை கொண்ட தொகுப்புக்கு ரூ 275ம், செலுத்த வேண்டும்.

மேலே குறிப்பிடப் பட்டுள்ள கட்டணங்கள் சரக்கு மற்றும் சேவை வரி இல்லாமல் குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கான சரக்கு மற்றும் சேவை வரிக்கு 18 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும்.

2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், அரசு கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு செட்டாப் பாக்ஸ் விலையின்றி வழங்கப்படும் என்றும், அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் குறைந்த கட்டணத்தில் தரமான சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும், டிஜிட்டல் ஒளிபரப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா  அறிவித்தார்கள். அந்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்னும் மூன்று மாத காலத்திற்குள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அனைத்து சந்தாதாரர்களுக்கும் செட்டாப் பாக்ஸ்கள் விலையின்றி வழங்கப்பட்டு டிஜிட்டல் கேபிள் டிவி சேவை வழங்கப்படும் என அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள இத்திட்டம் அம்மா அவர்கள் வகுத்துத் தந்த பாதையில் ஆட்சி நடத்தும் இந்த அரசுக்கு மேலும் ஒரு மணிமகுடமாய் அமைந்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தகவல் தொழில் நுட்பவியல் துறையின் முதன்மைச் செயலாளர் தா.கி. ராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெ. குமரகுருபரன், பொது மேலாளர் திருமதி பெ.ரமண சரஸ்வதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Label