OUR CLIENTS
வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியதில்லை!
வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியதில்லை! Posted on 02-Sep-2017 வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியதில்லை!

சென்னை, செப்.2-
வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

வாகன ஓட்டிகள் அனைவரும் நேற்று (செப்டம்பர் 1) முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். டிஜி லாக்கர் முறை ஏற்றுக்கொள்ளப்படாது என்று போலீசார் தெரிவித்துள்ள நிலையில் உயர் நீதிமன்றம் இக்கருத்தை வெளியிட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதி எம்.துரைசாமி கூறியதாவது: மோட்டார் வாகன சட்டம் 139 பிரிவின்படி வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியிருக்க வாகன ஓட்டிகளுக்கு இப்படியொரு கெடுபிடியை தமிழக அரசு விதிக்கக் காரணம் என்ன? விபத்துகளைத் தடுக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கும்போது அரசு ஏன் இதை தேர்வு செய்யும் வேண்டும் என வினவினார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது தொடர்பாக அரசு தரப்பு விளக்கத்தைப் பெற்றுத்தர கால அவகாசம் தேவை எனக் கோரினார். பிற்பகல் 2.15 மணிக்குள் விளக்கமளிக்குமாறு நீதிபதி அவகாசம் வழங்கினார். இந்த வழக்கில் நேற்று பிற்பகல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வாகன ஓட்டிகள், வாகனம் ஓட்டும்போது அசல் உரிமம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை திங்கள் கிழமை வரை அமல்படுத்தவில்லை என தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசு ஆணை அறிவித்த சற்று நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம், ஓட்டுனர்களின் அசல் உரிமம் கட்டாயம் என்பதை செவ்வாய்க்கிழமை வரை அமல்படுத்தவில்லை என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதனால் செப்டம்பர் 5ம் தேதிவரை, வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது ஓட்டுநருக்கான அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணை தளர்த்தப்பட்டுள்ளது

Label