OUR CLIENTS
13 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் சம்மன்!
13 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் சம்மன்! Posted on 02-Sep-2017 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் சம்மன்!

சென்னை, செப்.2-
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஈரோட்டைச் சேர்ந்த தங்கம் என்பவர் தொடரந்த  வழக்கில் 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஈரோட்டைச் சேர்ந்த தங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இதுதொடர்பாக வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Label