OUR CLIENTS
மாணவி அனிதா தற்கொலைக்கு தமிழக அரசே பொறுப்பு - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்...
மாணவி அனிதா தற்கொலைக்கு தமிழக அரசே பொறுப்பு - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்... Posted on 02-Sep-2017 மாணவி அனிதா தற்கொலைக்கு தமிழக அரசே பொறுப்பு - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்...

சென்னை, செப்.2-
நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்துக்கு தமிழக அரசே பொறுப்பு என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் கண்டனம்
நாட்டின் எதிர்காலமாக இருக்கும் மாணவர்கள் இதுபோன்ற முடிவை எடுக்கக்கூடாது.  ‘நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்றத்தில் நான் பிரச்சினை எழுப்பினேன். இருந்தாலும் அது நிறைவேறாத காரணத்தினால், மாணவி அனிதா தற்கொலை செய்திருக்கிறார். இந்த கொடுமையான தற்கொலைக்கு நிச்சயமாக மாநில குதிரை பேர அரசு பொறுப்பேற்கவேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

பீட்டர் அல்போன்ஸ்
மாணவி அனிதா உயிர்தியாகம் செய்திருப்பதாகவும், அவரது தற்கொலைக்கு பொறுப்பேற்று முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தினார்.

தினகரன்
டிடிவி தினகரன் விடுத்த அறிக்கையில் மாணவி அனிதாவின் தற்கொலை செய்தி, அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி  வெளியிட்ட அறிக்கை வருமாறு: மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு தற்காலிக விலக்காவது  கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்து கடைசி நேரத்தில் துரோகம் இழைத்தன. அதையும், அதனால் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் அதிர்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் கிராமப்புற ஏழை மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எடப்பாடி தலைமையிலான தமிழக அரசும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜி. ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், நீட் தேர்வு திணிக்கப்பட்டதன் காரணமாக மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பு அனிதாவுக்கு பறிக்கப்பட்டது. அனிதாவின் தற்கொலை செய்தி தாங்கொண்ண அதிர்ச்சியளிக்கிறது,. அவரது தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகளின் போக்கே காரணம் என்று கூறியுள்ளார்.

வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் மாணவி மரணம் தனக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

Label