OUR CLIENTS
நீட் தேர்வுக்கு எதிராக - திமுக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இன்று அழைப்பு! 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பு.
நீட் தேர்வுக்கு எதிராக - திமுக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இன்று அழைப்பு! 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பு. Posted on 04-Sep-2017 நீட் தேர்வுக்கு எதிராக - திமுக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இன்று அழைப்பு! 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பு.

சென்னை, செப்.4-
சென்னையில் இன்று தி.மு.க. நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு தகர்ந்த வேதனையில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா குடும்பத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார். 

அப்போது அவர் கூறுகையில் ‘அனிதா தற்கொலை செய்தார் என நான் கூற மாட்டேன். இந்த படுகொலைக்கு காரணம் மத்திய அரசின் அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பொறுப்பு ஏற்று கூண்டோடு பதவி விலக வேண்டும்.

இன்று எனது தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி அடுத்தக்கட்டமாக இந்த பிரச்சினையை எப்படி அணுகுவது என்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று கூறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் இன்று (திங்கள்) மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோருக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

Label