OUR CLIENTS
மலையாள மொழி பேசும் மக்களுக்கு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓணம் திருநாள் நல்வாழ்த்து.
மலையாள மொழி பேசும் மக்களுக்கு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓணம் திருநாள் நல்வாழ்த்து. Posted on 04-Sep-2017 மலையாள மொழி பேசும் மக்களுக்கு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓணம் திருநாள் நல்வாழ்த்து.

சென்னை, செப்.4-
கேரளாவில் கொண்டாடப்படும் திருவோணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  வெளியிட்டுள்ள ஓணம் வாழ்த்து செய்தி:  மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய பண்டிகையான திருவோணப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கி, அந்த சக்கரவர்த்தியின் தலையில் தனது காலை வைத்து பாதாள உலகிற்கு தள்ளும்  முன்பு, ஆண்டுக்கு ஒருமுறை பூலோகம் வந்து தன்னுடைய அன்பு மக்களை காண  வேண்டுமென்ற மகாபலி சக்கரவர்த்தியின் வேண்டுதலை ஏற்று அருள் புரிந்தார்.

அதன்படி மகாபலி சக்கரவர்த்தி மக்களை காணவரும் தினத்தை திருவோணத் திருநாளாக மலையாள மொழி பேசும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பத்து நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மக்கள் தங்கள் வீடுகளின் வாயில்களில் வண்ணப் பூக்களால் அத்தப்பூ கோலங்களிட்டு, புத்தாடை உடுத்தி, குடும்பத்தினருடன் கூடி அறுசுவை உணவு உண்டு, ஆடல், பாடல், விளையாட்டுகளுடன் ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். 

சாதி, சமய பேதமின்றி, அனைத்து தரப்பு மக்களாலும் சமத்துவத்துடன்  ஒற்றுமையாக கொண்டாடப்படும் ஓணத் திருநாளில், உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் உயர்ந்து தழைக்க வேண்டுமென்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Label