OUR CLIENTS
சமந்தா
சமந்தா Posted on 04-Sep-2017 சமந்தா

சமந்தா திருமணத்திற்கு பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு கிடையாது.

நாக சைதன்யா, சமந்தா திருமணத்திற்கு திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி திருமணம் செய்து கொள்கிறார். அவர்களின் திருமணம் கோவாவில் நடைபெறுகிறது. திருமண வரவேற்பு ஹைதராபாத்தில் நடக்கிறது.

சமந்தா, சைதன்யா திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் இருவீட்டார் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.
 
ஹைதராபாத்தில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தான் திரையுலக பிரபலங்களை அழைப்பதாக நாகர்ஜுனா கூறியுள்ளார். நாகர்ஜுனா தனது இளைய மகன் அகிலின் படமான ஹலோ ரிலீஸாக உள்ள டென்ஷனில் உள்ளார்.

திருமணத்தன்று சமந்தா சைதன்யாவின் பாட்டி அணிந்த பட்டுப்புடவையை தான் உடுத்துகிறார். அந்த புடவையை புதுப்பித்து அவர் அணிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவும் சரி, நாக சைதன்யாவும் சரி படங்களில் பிசியாக இருப்பதால் தேனிலவை தள்ளிப்போட்டுள்ளனர். திருமணம் முடிந்த 3வது நாள் இருவரும் படப்பிடிப்புக்கு செல்கிறார்கள்.

Label