OUR CLIENTS
கிருஷ்ணகிரி சாலை விபத்தில் 4 பேர் பலி! காருக்கு பொதுமக்கள் தீவைப்பு.
கிருஷ்ணகிரி சாலை விபத்தில் 4 பேர் பலி! காருக்கு பொதுமக்கள் தீவைப்பு. Posted on 04-Sep-2017 கிருஷ்ணகிரி சாலை விபத்தில் 4 பேர் பலி! காருக்கு பொதுமக்கள் தீவைப்பு.

கிருஷ்ணகிரி, செப்.4-
கிருஷ்ணகிரி - பெங்களூர் நெடுஞ்சாலை விபத்தில் 4 பேர் பலியானதை அடுத்து பொதுமக்கள் மேம்பாலம் அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய காருக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர். அங்குமிங்கும் ஓடிய மக்களில் சிலர் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எஸ்.பி., மகேஷ்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி கந்திக்குப்பம் நெடுஞ்சாலையில் நேற்று காலை சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு கார் வந்துகொண்டிருந்தது. இந்த கார் சென்னை பதிவெண் கொண்டது. அதன் பின்னால் மற்றொரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் பெங்களூரு பதிவெண் கொண்டது. பெங்களூரு பதிவெண் கொண்ட வாகனம் சென்னை பதிவெண் காரின் பின்புறத்தில் மோதியுள்ளது.

இதில் சென்னை பதிவெண் காரை ஓட்டிய முனிராஜ் கட்டுப்பாட்டில் இருந்து கார் விலகியது. அந்த கார் சாலையில் நின்றிருந்தவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் 4 பேர் பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

அங்கு கூடியிருந்த மக்கள், பெங்களூரு பதிவெண் கொண்ட காரை அடித்து நொறுக்கி, சாலையோரத்தில் தள்ளிவிட்டு  தீ வைத்தனர். 

கார் விபத்தில் பரத்குமார் (17) கந்திக்குப்பம், கோகுல் (18) கந்திக்குப்பம், வனஜா (48), தர்மர் (40) ஆகியோர் சம்ப இடத்தில் பலியாகினர். சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே கந்திக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். நீண்ட நாட்களாக அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்த அம்மக்கள், இன்றைய விபத்தில் 4 பேர் பலியானதால், அந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டியே ஆக வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போலீஸ் எஸ்.பி., மகேஷ்குமார் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரசம் பேசினார். ஆனால், மக்கள் அதை கேட்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே போலீசார் தடியடி நடத்தி ஆர்ப்பாடம் செய்தவர்களைக் கலைத்தனர்.

Label