OUR CLIENTS
383 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது! முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வழங்கினார்.
383 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது! முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வழங்கினார். Posted on 06-Sep-2017 383 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது! முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வழங்கினார்.

சென்னை, செப்.6-
ஜெயலலிதா வழியில் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், தமிழகத்தில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 383 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கிய பின், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கற்பித்தலை தாண்டி, மாணவர்களின் சுய சிந்தனையை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Label