OUR CLIENTS
முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு - 19 எம்எல்ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு.
முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு - 19 எம்எல்ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு. Posted on 06-Sep-2017 முதல்வருக்கு  எதிராக ஆளுநரிடம் மனு - 19 எம்எல்ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு.

சென்னை, செப்.6-
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த 19 அதிமுக எம்எல்ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்தது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.  இதையடுத்து, தினகரன் அணியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் நேற்று பேரவைச் செயலர் பூபதியை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். ஆனால், ஆளுநரிடம் மனு கொடுத்த 19 எம்எல்ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தினகரன் அணியைச் சேர்ந்த தங்கத் தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தபோது தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, தினகரன் அணியில் இருந்து 9 எம்எல்ஏக்கள் வெளியேறியதாக வந்த தகவலில் உண்மையில்லை என்று தெரிவித்தனர். மேலும், ஊழல் குற்றச்சாட்டு கூறிய ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவியா? என்று கேள்வி எழுப்பியவர்கள், அதிமுக பொதுக் குழுவைக் கூட்ட எடப்பாடி அணிக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினர்.

அதோடு, ஆளுநரிடம் மனு அளித்த 19 எம்எல்ஏக்களும் வரும் 7ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தனபால் உத்தரவிட்டுள்ளார். ஆனால், எங்கள் தரப்பில் 15 நாள் அவகாசம் தேவை என்று கேட்டுள்ளோம்.  ஜெயா டிவி தமிழகத்தின் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றும் கூறினார்கள்.

Label