OUR CLIENTS
எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை ஒப்புகொண்ட ஜெயக்குமார்!
எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை ஒப்புகொண்ட ஜெயக்குமார்! Posted on 06-Sep-2017 எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை ஒப்புகொண்ட ஜெயக்குமார்!

சென்னை, செப்.6-
எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை அமைச்சர் ஜெயக்குமாரே ஒப்புக்கொண்டுவிட்டார் என்று எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 135 பேரில் 21 பேர் தங்களிடம் உள்ளதாக தலைமைச் செயலகத்தில் எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்தார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது மேலும் அவர் கூறியதாவது: - திமுகவுக்கு 89 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 8 பேர், முஸ்லிம் லீக்குக்கு ஒரு உறுப்பினர் இருக்கின்றார்கள். அதிமுக கணக்கில் வரும் எஞ்சிய 113-ல் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 3 பேர் தங்களிடம் உள்ளதாக தெரிவித்தார். மேலும் எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை அமைச்சர் ஜெயக்குமாரே ஒப்புக்கொண்டுவிட்டார்.

தினகரனுடன் ஆலோசித்து, 2 நாட்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய உள்ளோம்.  ஆளுநர் காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரை மாற்ற வேண்டும் என்பது மட்டுமே எங்களது கோரிக்கை.  சபாநாயகர் நோட்டீஸ் குறித்து விளக்கம் அளிக்க, சட்டப்பேரவை செயலரிடம் 15 நாள் அவகாசம் கோரியுள்ளோம் என்றும் அதிமுக பொதுக்குழு கூட்ட எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை என்றும் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறினார்.

Label