OUR CLIENTS
உரிமைக்குழு நோட்டீசை ரத்து செய்ய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு தாக்கல்.
உரிமைக்குழு நோட்டீசை ரத்து செய்ய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு தாக்கல். Posted on 06-Sep-2017 உரிமைக்குழு நோட்டீசை ரத்து செய்ய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு தாக்கல்.

சென்னை, செப்.6-
சட்டமன்ற உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்தது தொடர்பாக ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், உரிமை மீறல் பிரச்சனையை காரணம் காட்டி தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டிருப்பதாக பேசப்பட்டது. 

இந்நிலையில், உரிமைக்குழுவின் நோட்டீசை எதிர்த்து 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.  அவர்கள் தங்கள் மனுவில், சபாநாயகரும் உரிமைக்குழுவும் அரசியிலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்துவிட்டு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள். எனவே, உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும், என கூறியிருந்தனர். சபையை அவமதிக்கும் நோக்கில் தி.மு.க. உறுப்பினர்கள் குட்கா கொண்டு வந்ததாக சபாநாயகர் தரப்பு வாதிட்டது.

Label