OUR CLIENTS
அதிமுக பெரும்பான்மை இழக்கவில்லை! உயர் நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு பதில்!!
அதிமுக பெரும்பான்மை இழக்கவில்லை! உயர் நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு பதில்!! Posted on 06-Sep-2017 அதிமுக பெரும்பான்மை இழக்கவில்லை! உயர் நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு பதில்!!

சென்னை, செப்.6-
எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழக்கவில்லை, ஆகவே சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிட முகாந்திரமில்லை என பொதுநல வழக்கில் ஆளுநர் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அரசுக்கு எதிராக அவர்கள் கட்சி எம்.எல்.ஏக்களே ஆளுநரிடம் மனு அளித்துவிட்டதால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது, ஆகவே உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று புகழேந்தி சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆளுநர் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் விஜய்நாராயணன் வாதத்தின் போது கூறியதாவது.

ஒரு கட்சி மூன்றில் ஒரு பங்கு பிளவு பட்டால் அது பெரும்பான்மை இழந்ததாக கருதப்படும். அப்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால் தற்போது அதிமுகவில் 19 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கடிதம் கொடுத்துள்ளனர். அதை பிளவாக கருத முடியாது. மேலும் அவர்கள் அரசுக்கு எதிராக கடிதம் கொடுக்கவில்லை. அவர்கள் முதல்வருக்கு எதிராகத்தான் கொடுத்துள்ளனர். ஆகவே அது அவர்கள் உட்கட்சி பிரச்சினை. ஆகவே சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிடும் தேவை வரவில்லை. 

மேலும் மு.க.ஸ்டாலின் கொடுத்த மனு அடிப்படையில் பொதுநலவழக்கு போடப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டவரோ, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியோ இல்லாத பட்சத்தில் வழக்குத் தொடர அவருக்கு முகாந்திரம் இல்லை.ஆகவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அரசு தரப்பை நிரூபிக்க வேண்டுகோள் வைத்து வாதாட பொதுமக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படையில் உரிமை உண்டு என்று தெரிவித்தார். ஆளுநர் தரப்பில் இந்த மனுவை ஏற்கக் கூடாது என்று தாம் வாதாட உள்ளதாக அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதை அடுத்து வழக்கை வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்கு தலைமை நீதிபதி அமர்வு ஒத்தி வைத்தது.

Label