OUR CLIENTS
ஈரோட்டில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்களின் கனவு பலிக்காது முதல்வர் பழனிசாமி பேச்சு.
ஈரோட்டில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்களின் கனவு பலிக்காது முதல்வர் பழனிசாமி பேச்சு. Posted on 07-Sep-2017 ஈரோட்டில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்களின் கனவு பலிக்காது முதல்வர் பழனிசாமி பேச்சு.

ஈரோடு, செப். 7-
குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் சிலரின் முயற்சி பலிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

ஈரோட்டில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்றும் அறிவித்தார். சிலர் தங்களது பேச்சால், அவர்களுக்கு வரும் ஆபத்தை உணராமல் பேசி வருகிறார்கள் என்றும் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். அரசை விமர்சிப்பதே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு வேலையாக உள்ளது என்று அவர் கூறினார். சிலர் குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள், அது நிறைவேறாது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Label