OUR CLIENTS
அடுத்த கல்வி ஆண்டு முதல் - 300 அரசு பள்ளிகள் தனியாருடன் இணைந்து செயல்பட உள்ளது - அமைச்சர் ரதோர் தகவல்.
அடுத்த கல்வி ஆண்டு முதல் - 300 அரசு பள்ளிகள் தனியாருடன் இணைந்து செயல்பட உள்ளது - அமைச்சர் ரதோர் தகவல். Posted on 07-Sep-2017 அடுத்த கல்வி ஆண்டு முதல் - 300 அரசு பள்ளிகள் தனியாருடன் இணைந்து செயல்பட உள்ளது - அமைச்சர் ரதோர் தகவல்.

ஜெய்ப்பூர், செப். 7-
ராஜஸ்தான் மாநிலத்தில் 9,895 அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இப்பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் அவற்றில் 300 பள்ளிகள் தனியாருடன் இணைந்து செயல்பட உள்ளதாக அம்மாநில கிராமப்புற மேம்பாட்டு துறை மந்திரி ராஜேந்திர ரதோர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரதோர் கூறுகையில், கல்வித்தரத்தில் பின்தங்கிய 300 பள்ளிகள் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் தனியாருடன் இணைந்து செயல்படும்.

இந்த திட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்காக 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும், இதனால் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எந்த இடையறும் இருக்காது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இந்த பள்ளிகளில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் மற்ற அரசு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Label