OUR CLIENTS
பசு பாதுகாவலர்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
பசு பாதுகாவலர்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. Posted on 07-Sep-2017 பசு பாதுகாவலர்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

புதுடெல்லி, செப். 70-
வட மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி செயல் பட்டு வருகிறார்கள்.

இவர்கள் பசுவதையில் ஈடுபட்டவர்களை நேரடியாக தடுத்து நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு: பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நாட்டில் வன்முறை நடப்பதையும், தனிநபர்கள் சட்டத்தை கையில் எடுப்பதையும் அனுமதிக்க முடியாது. பசு பாதுகாவலர்களால் ஏற்படும் பிரச்சினைகளை கண்காணிக்க நாடு முழுவதும், மாவட்டந்தோறும் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

பாதுகாவலர்களை கண்காணிக்க அவர்களுக்கு மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Label