OUR CLIENTS
லாலு மகள் மிசா பாரதியின் பண்ணை வீடு முடக்கம்.
லாலு மகள் மிசா பாரதியின் பண்ணை வீடு முடக்கம். Posted on 07-Sep-2017 லாலு மகள் மிசா பாரதியின் பண்ணை வீடு முடக்கம்.

புதுடெல்லி, செப். 7-
ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் லாலுவின் மகள் மிசாபாரதி எம்.பி.யின் டில்லி பண்ணை இல்லத்தை அமலாக்கத்துறையினர்  முடக்கினர்.

பீகார் முன்னாள் முதல்வரான ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலுபிரசாத் யாதவ் மீது பல்வேறு கால்நடைத்தீவன ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்தநிலையில் அவர் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஐ.ஆர்.டி.சி. ஓட்டல் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகவும் இதன் மூலம் கிடைத்த பணத்தை தனது குடும்பத்தினர் பெயரில் உள்ள நிறுவனங்களுக்கு மாற்றியதாகவும் எழுந்த குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இது தொடர்பாக லாலு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறையினர்  சோதனை நடத்தினர்.  டெல்லியில் லாலு மகள் மிசாபாரதி எம்.பி.க்கு  சொந்தமான பல கோடி மதிப்புள்ள பண்ணை வீடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுபற்றி மிசாபாரதி, அவரது கணவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் அந்த வீட்டை அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் முடக்கினர். மிசைல் பேக்கர்ஸ் அண்ட் பிரிண்டர்ஸ்  என்ற நிறுவனத்தின் பெயரில் ரூ.1.2 கோடிக்கு அந்த  பங்களா வாங்கப்பட்டுள்ளது. இது 2008&09ல் சட்டவிரோதமாக மாற்றப்பட்ட பணம் மூலம் இந்த இல்லத்தை வாங்கி உள்ளதாக அமலாக்கப்பிரிவினர் கண்டு பிடித்ததையடுத்து முடக்கி உள்ளனர்.

Label