OUR CLIENTS
போலீசில் வாகனங்கள் பற்றாக்குறை அதிகரிப்பு - சிறப்பு பிரிவுகளுக்கு பாடாவதி வாகனங்கள் ஒதுக்கீடு!
போலீசில் வாகனங்கள் பற்றாக்குறை அதிகரிப்பு - சிறப்பு பிரிவுகளுக்கு பாடாவதி வாகனங்கள் ஒதுக்கீடு! Posted on 07-Sep-2017 போலீசில் வாகனங்கள் பற்றாக்குறை அதிகரிப்பு - சிறப்பு பிரிவுகளுக்கு பாடாவதி வாகனங்கள் ஒதுக்கீடு!

சேலம், செப்.7-
தமிழக போலீசில் வாகனங்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், பாடாவதி வாகனங்கள், சிறப்பு பிரிவுகளுக்கு ஒதுக்கப்படுவதால், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள், பாடாவதி வாக னங்களாலும், அதுவும் இல்லாமலும், அவதியை சந்தித்து வரு கின்றனர்.

தமிழக போலீசில், தற்போதைய நிலையில், 95 ஆயிரத்து, 145 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களின் பயன் பாட்டுக்காக, அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டு தகவலின் படி, 17 ஆயிரத்து, 87 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், இன்ஸ்பெக்டர் துவங்கி, டி.ஜி.பி., வரை, பயன் பாட்டுக்காக, 5,742 ஜீப் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்ஸ்பெக்டர்கள் துவங்கி, டி.ஜி.பி., வரையில், அதிகாரிகள் மட்டும், 18 ஆயிரத்து, 125 பேர் பணியாற்றுகின்றனர். இதனால், மகிழுந்து, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள், சட்டம் ஒழுங்கு. குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, அதிக அளவில் வழங்கப்படுகிறது. இந்த துறையில் குறைந்த பட்சம், ஏழு ஆண்டு பயன் படுத்திய பின், சிறப்பு பிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது. மாநகர, மாவட்ட போலீஸ் அதிகாரிகள் புதிய வாகனங்களை பயன்படுத்தும் நிலையில், சிறப்பு பிரிவு அதிகாரிகள் பாடாவதி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு, ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு (ஓ.சி.யூ.,) மதம் சார்ந்த குற்றங்கள் கண்காணிப்பு பிரிவு உட்பட, 18 பிரிவு அதிகாரிகளுக்கு வாகனங்களே இல்லை.

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, விஜிலென்ஸ், திருட்டு வி.சி.டி.,தடுப்பு பிரிவு, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு, வணிக குற்றத்தடுப்பு பிரிவு உட்பட, 22 பிரிவுகளுக்கு பாடாவதி வாகனங்கள், அங்கு பணியாற்றும் இன்ஸ்., டி.எஸ்.பி.,க்களின் எண்ணிக்கையை விட, 50 சதவீதம் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளன. 

இந்த வாகனங்களை பயன் படுத்தினால், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல முடியாது என்பதோடு, பல நேரங்களில் மக்கராகி அவதியையும் சந்திக்க நேரிடுகிறது. இதனால், சில மாவட்டங்களில் சிறப்பு பிரிவு அதிகாரிகள், தங்களின் சொந்த வாகனங்களையும், வாடகை வாகனங்களையும் பயன் படுத்தி வருகின்றனர்.

Label