OUR CLIENTS
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சபாநாயகர் உத்தரவு
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சபாநாயகர் உத்தரவு Posted on 09-Sep-2017 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்  14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சபாநாயகர் உத்தரவு

சென்னை, செப்.9-
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் வரும் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆக.22ம் தேதி முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவ்விடம் கடிதம் அளித்தனர். பேரவை மற்றும் கட்சி முடிவுகளை மீறிய காரணத்தால் அவர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க அரசு கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவரிடம் பரிந்துரைத்தார். இதைத்தொடர்ந்து, 19 எம்எல்ஏக்களும் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு முதலில் விளக்கம் அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், பின்னர் விரிவான விளக்கம் அளிக்க கால அவகாசம் கோரி கடந்த 5-ம் தேதி சபாநாயகர் தனபாலிடம் கடிதம் அளித்தனர்.  இதனையடுத்து சபாநாயகர், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வரும் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Label