OUR CLIENTS
பழனிசாமி அரசை பதவி நீக்கம் செய்யும் வரை போராடுவோம் ஸ்டாலின் ஆவேசம் பேட்டி
பழனிசாமி அரசை பதவி நீக்கம் செய்யும் வரை போராடுவோம் ஸ்டாலின் ஆவேசம் பேட்டி Posted on 09-Sep-2017 பழனிசாமி அரசை பதவி நீக்கம் செய்யும் வரை போராடுவோம் ஸ்டாலின் ஆவேசம் பேட்டி

தஞ்சாவூர், செப்.9-
பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கலைக்க ஆளுநர் மறுத்தால் கலைக்கும் வரை போராடுவோம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று  நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதால் செயல்படாத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.  தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. வரும் 10-ம் தேதி ஆளுநரை சந்தித்து ஆட்சியை கலைக்க சொல்வோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சி கவிழ்க்கப்படும் வரை போராடுவோம்.

தமிழகத்தில் நடக்கும் ஆட்சி, நொடிப்பொழுதில் மாற வாய்ப்பு உள்ளது. திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தற்போதைய அரசை கவிழ்க்க முயற்சிக்கவில்லை.  இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவமனை உள்ள மாநிலம் தமிழகம்தான். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.  இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Label