OUR CLIENTS
அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு Posted on 09-Sep-2017 அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை, செப்.9-
வரும் செப்டம்பர் 12ம் தேதி ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டக்கூடாது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வெற்றிவேல் சார்பிர் வழக்கறிஞர் ராமானுஜம் மனுவை தாக்கல் செய்தார்.

வரும் 12ம் தேதி முதலில் செயற்குழுவையும், பின் பொதுக்குழுவையும் கூட்டப்போவதாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பின் படி பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என வெற்றிவேல் தனது மனுவில் கூறியுள்ளார். மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என நீதிபதி கார்த்திகேயன் கூறியுள்ளார். மனுவை நேற்றே விசாரிக்க வேண்டும் என்ற வெற்றிவேல் தரப்பின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

Label