OUR CLIENTS
கடந்த 15 வருடங்களில் அமெரிக்கா & இந்தியா உறவு மேம்பாடு.
கடந்த 15 வருடங்களில் அமெரிக்கா & இந்தியா உறவு மேம்பாடு. Posted on 11-Sep-2017 கடந்த 15 வருடங்களில் அமெரிக்கா & இந்தியா உறவு மேம்பாடு.

வாஷிங்டன், செப்.11-
கடந்த 15 வருடங்களில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார துறைகளில் அமெரிக்கா - இந்தியா உறவு மேம்பட்டுள்ளதாக மூத்த இந்திய தூதர் நேற்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கான இந்திய துணை தூதர் சந்தோஷ் ஜா, “25-30 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை இந்திய பெருங்கடலை விட்டும், இந்தோ-பசிபிக்-ஐ விட்டும் வெளியே தள்ளுவதை குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்பட்டது. 

ஆனால் நேற்று, அமெரிக்காவை வரவேற்று, அவர்களுடன் ஒன்றுசேர்ந்து பணியாற்றுகிறோம். மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா அமெரிக்காவுடனான நட்பு மிகவும் நெருங்கிய நட்பாகும்” என்று கூறினார்.

“பாதுகாப்புத்துறையில் இருதரப்பு வர்த்தகத்தில் 1500 கோடி அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்துள்ளது” என்று சந்தோஷ் தெரிவித்தார். 1993 ஆம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியாக பணிபுரிந்த சந்தோஷ் ஜா டில்லியை சேர்ந்தவர்.
சமீபத்தில் அமெரிக்காவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.

”கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து முதன்முறையாக கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது. வரும் 2018ஆம் ஆண்டு மத்தியில் 200 கோடி அமெரிக்க டாலர்கள்வரை வர்த்தகம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முக்கிய முதலீடான எரிவாயு வர்த்தகம் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படும்” என்று சந்தோஷ் தெரிவித்தார்.

Label