OUR CLIENTS
வார ராசி பலன்கள்
வார ராசி பலன்கள் Posted on 25-Sep-2017 வார ராசி பலன்கள்

மேஷம்

வாரத்தின் ஆரம்பமே சந்திராஷ்டமமாக அமைவதால் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் எதிலும் குழப்பமாக இருப்பீர்கள். அஷ்டமச்சனி முடியப் போவதாலும், ஆறில் இருந்த குரு ஏழாமிடத்திற்கு மாறி ராசியை பார்ப்பதாலும் மேஷ ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் எதுவும் கொடுக்காத வாரம் இது. குறிப்பாக புதன், வியாழன்கிழமைகளில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் நிறைவேறும்
மேஷராசிக்கு பூர்வ புண்ணிய பலத்தினால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடப்பதோடு குடும்பத்திலும் சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும். உங்களின் மனோதைரியம் அதிகமாக இருக்கும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். உங்களில் சிலர் வேலையில் சாதனை செய்து நல்லபெயர் எடுப்பீர்கள். நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.
ராகுதசை நடப்பவர்களுக்கு அதிக நன்மைகள் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மறைமுகமான வழிகளில் தனலாபம் இருக்கும். வார ஆரம்பத்தில்27-9-2017 காலை 9.57 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. 

ரிஷபம்

வாரம் முழுவதும் 4, 5க்குடைய புதனும், சூரியனும் பரிவர்த்தனை யோக அமைப்பில் இருப்பதாலும், வார இறுதியில் அதிர்ஷ்டத்தை தருபவரான புதன் உச்ச நிலையை அடைவதாலும் இந்த வாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு யோகம் தரும் வாரமாக இருக்கும். புதனின் உச்ச பலத்தால் உங்களில் அறிவுசார்ந்த துறைகளில் இருப்பவர்கள் மற்றும் புத்தியை மூலதனமாக வைத்து தொழில் செய்பவர்கள் அனைவருக்கும் நல்லவிதமான வருமானங்கள் உண்டு. வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் இலாபத்துடன் நடக்கும். அதிகாரம் செய்யும் பதவியில் இருப்பவர்கள், காவல்துறையினர் போன்றவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரம். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமைகள் வரும் என்பதால் தொழிலில் அக்கறை காட்டுங்கள். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம். 
லயசனிங் எனப்படும் பணத்திற்காக வேலை முடித்துக் கொடுப்பவர்களுக்கு அனைத்துக் காரியங்களும் சுலபமாக முடியும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் 27-9-17 காலை 9.57 முதல் 29-9-17 இரவு 10.27 வரை சந்திராஷ்டம நாட்கள். இந்த தினங்களில் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்தி வைப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். 

மிதுனம்

வார ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் தன்னுடைய நண்பரான மூன்றுக்குடைய சூரியனுடன் பரிவர்த்தனை நிலையில் இருப்பதும், அதன் பிறகு ஏறத்தாழ பத்து மாதங்களுக்கு ஒருமுறை அடையப் போகும் உச்ச வலிமையை இந்த வாரம் பெறுவதும் யோகம் என்பதால் மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் செயல்படும் வாரம் இது. இன்னும்சில வாரங்களுக்கு புதனின் உச்ச நிலை நீடிக்கும் என்பதால் தயங்கி கொண்டிருந்த அனைத்தையும் சந்தித்து நீங்கள் வெற்றி பெறும் வாரம் இது. 
சிலருக்கு அதிகாரப்பணியும் வி.ஐ.பி.க்கள் அறிமுகமும் இந்த வாரம் உண்டு. வேலை, வியாபாரம் சொந்த தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பணவரவு இருக்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். நிறைவேற்றாமல் இருந்த நேர்த்திக் கடன்களை செலுத்த முடியும்.  வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சிறந்த வாரம்.பெண்கள் மூலமான செலவுகள் இருக்கும். சமீபத்தில் திருமணமானவர்கள் மனைவிக்கு அவர் ஆசைப்பட்டுக் கேட்கும் ஒரு பொருளை வாங்கித் தருவீர்கள். வார இறுதியில் 29-9-17 இரவு 10.27 முதல் 2-10-17 காலை 8.51 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் மூலம் பின்னாளில் பிரச்சினைகள் வரும் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. 

கடகம்

வார ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் நீசமாகி, சனியுடனும் சேர்ந்து, செவ்வாய் பார்வையும் பெறுவதால் வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் தட்டுத் தடுமாறும் வாரமாக இது இருக்கும். ராசிநாதன் வலுவிழந்து பாபசம்பந்தம் பெறுவதால் எதிலும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக உறவுப்பெண்கள் விஷயத்தில் கோபமூட்டும் விஷயங்கள் நடக்கும் என்பதால் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம் இது. 
அலுவலகங்களில்  பொறாமை மற்றும் துரோகத்தால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் திரும்பப் பதிலடி கொடுக்கத் தொடங்குவீர்கள். பணவரவுக்கு தடைகள் நீங்குவதால் இனிமேல் நிலையான வருமானம் வரத் துவங்கும். இதுவரை உங்களைப் பிடிவாதக்காரர் என்று தவறாகப் புரிந்து கொண்டவர்கள் உங்கள் நல்ல மனதைத் தெரிந்து கொண்டு அருகில் வருவார்கள். அனைத்தும் நன்மையாகும் வாரம் இது. 
முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் இருக்கும். பெண்களால் லாபம் கிடைக்கும் வாரம் இது. அதேநேரம் அவர்களால் செலவும் நிச்சயமாக இருக்கும். சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும்.

சிம்மம்

வார ஆரம்பத்தில் ராசிநாதன் சூரியன் பரிவர்த்தனை நிலையில் ஆட்சியிலேயே இருப்பதும், பிற்பகுதியில் தனாதிபதி புதன் உச்சமாவதும் சிம்மத்திற்கு நல்ல பலன்களை கொடுக்கும் நிலை என்பதால் இந்த வாரம் பண வரவுகளை தரும் வாரமாக இருக்கும். பணம் என்பது வேலை, தொழில், வியாபாரம் மூலம் சம்பாதிக்க கூடியது என்பதால் இதுவரை மேற்கண்ட ஜீவன அமைப்புகளில் நல்லவை நடக்காதவர்கள்  மாற்றங்களை சந்தித்து நன்மைகளை பெறுவீர்கள். 
பொருளாதார நிலைமை நல்லபடியாகவே இருக்கும். செலவுகள் அதிகமாகவே உண்டு என்றாலும் பணவரவிற்குப் பஞ்சம் இருக்காது. குறிப்பிட்ட சிலருக்கு எதிர்ப்புகளையும் எதிரிகளையும் ஜெயிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களுடைய மனதைப் புரிந்து கொள்ள முடியாமல் எந்தநேரத்தில் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று நண்பர்களும் குடும்பத்தினரும் குழம்பிப் போவார்கள். வேலை தொழில் ஜீவன அமைப்புகளில் இடைநறுகள் எதுவும் இல்லாமல் சகஜமாகவே செல்லும். 
தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குறிப்பாக பெண்களால் நன்மை அடைவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் வருவது போல் முதலில் காட்டி பிறகு அதிக நஷ்டம் ஏற்படலாம் என்பதால் நக வணிகத்தில் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். இளைய பருவத்தினருக்கு நினைப்பது நடக்கும் உங்களின் வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்களை இப்போது பெறுவீர்கள். ஒரு சிலருக்கு தோழிகளால் இனிமையான அனுபவங்கள் இருக்கும்.

கன்னி

வாரத்தின் ஆரம்ப நாட்களில் ராசிநாதன் சூரியனுடன் பரிவர்த்தனையாவதன் மூலம் ராசியிலேயே இருக்கும் நிலை பெறுகிறார். அதைவிட மேலாக வார இறுதியில் நேரிடையாகவே உச்ச அமைப்பு பெறுவதால் கன்னி ராசியை சந்தோஷத்தின் உச்சியில் இருக்கும் வைக்கும் வாரம் இது. குறிப்பிட்ட சிலர் வீட்டிலோ, அலுவலங்களிலோ நல்லபெயர் எடுக்கும் செயல்கள், அல்லது சாதனைகளை செய்வீர்கள். கன்னியை அடுத்துவர்கள் மெச்சும் வாரம் இது,.  நட்புக்கிரகங்கள் யோகநிலையில் இருப்பதால் உங்களுக்கு தொட்டது துலங்கும். எடுத்த காரியம் வெற்றி பெறும். நினைத்தது நடக்கும். எனவே நீண்டகாலமாக நினைத்திருந்த விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ள இது தகுந்த நேரம். பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகள் வலுவாக நடப்பவர்கள் சில இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவீர்கள் என்பதால் கிரகங்கள் தருகின்ற இந்த அதிர்ஷ்ட நிலைமையைப் பயன்படுத்தி சுறுசுறுப்புடன் செயலாற்றினால் எல்லாம் கைகூடும். 
எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நல்லவாரம் இது. இதுவரை கோர்ட்கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் சாதகமாகத் திரும்பும். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செழிப்பும் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கலாம். எந்தவித தொல்லைகளோ கஷ்டங்களோ இருக்காது. 

துலாம்

வார ஆரம்பத்தில் ஜீவனாதிபதி சந்திரன் நீச நிலையில் சனியுடன் இணைந்து செவ்வாய் பார்வை பெறுவதால் இந்த வாரம் வேலை, தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகளில் துலாம் ராசிக்கார்ர்கள் மந்தமான பலனையும், அலுவலகங்களில் எரிச்சலூட்டும் சம்பவங்களையும் சந்திக்கும் வாரமாக இருக்கும். உங்களை பிடிக்காத சிலரின் பின்னால் செய்யும் வேலைகளால் குழப்ப நிலையில் இருப்பீர்கள். வாரத்தின் இறுதியில் அனைத்தும் நீங்கி சகஜமான நிலைக்கு நீங்கள் வரும் வாரம் இது.  குடும்பாதிபதி செவ்வாய் சுபவலுப் பெறுவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்லவை நடக்கும். இளைய பருவத்தினர் காதல் கொள்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தொல்லை தராது. இளைய பருவத்தினருக்கு எதிர்காலத்தை பற்றிய பயங்கள் விலகும். பனிரெண்டாம் இடத்தில் உச்சமாகும் புதனால் விரயங்கள் வரும். தொழில் இடங்களில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்ப வேண்டாம். 
ஜீவன ஸ்தானத்தில் ராகு இருப்பதால் சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள். சொந்தக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள் உண்டு. பெரியவர்களுக்கு காரியத் தடையும் சுற்றி உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களும் உண்டு. சுக்கிரனின் வலுவால் இளையவர்களுக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். மனதிற்குள் காதலிக்க ஆரம்பித்து மயக்கத்தில் இருப்பீர்கள். நல்ல எதிர்காலத்திற்கான  ஆரம்ப வாரம் இது.

விருச்சிகம்

வார ஆரம்பத்திலேயே பாக்கியாதிபதி சந்திரன் நீசமாகி ராசியில் சனியுடன் அமர்ந்திருக்கும் வாரம் இது. உங்களில் சிலர் இன்னும் எத்தனை காலத்திற்குதான் இதுபோன்ற சங்கடமான நிலைகளையும், சோதனைகளையும் சந்தித்துக் கொண்டே இருப்பது என்று தன்னம்பிக்கை இழக்கும் வாரம் இது. அடிக்கடி நான் எழுதுவது போல சோதனைகளும் வேதனைகளும் இன்னும் சில வாரங்களுக்குத்தான் என்பதால் அக்டோபர் இறுதி சனிப்பெயர்ச்சியை மனதில் நிறுத்தி விருச்சிக ராசிக்கார்ர்கள் புத்துணர்ச்சி பெறவேண்டிய வாரம் இது. 
கேட்டை நட்சத்திரத்தில் தற்போது சனி சென்று கொண்டிருப்பதால் கோட்டை கட்டி ஆள வேண்டிய சிலர் தற்போது சீர்கேட்டினை சந்தித்து அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கேட்டை நட்சத்திரக் குழந்தைகள் இருக்கின்ற குடும்பத்திலும் சிக்கல்கள் இருக்கின்றன. சனியின் தாக்கத்தால் சிலருக்கு மனதில் ஒரு விதமான கலக்க உணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கும். இன்னும் சில வாரங்களில் சனி விலக இருப்பதால் எதற்கும் பயப்பட வேண்டியது இல்லை.  
கணவன், மனைவி பிரச்னையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. வம்பு, வழக்கு போன்றவைகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் வீண் சண்டைக்கு போக வேண்டாம். பொறுமையாக இருங்கள். கோபத்தில் ஏதாவது சொல்லி அது சண்டையாகும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்.

தனுசு

ராசிநாதன் லாபத்தில் அமர்ந்திருக்க தர்மகர்மாதிபதிகள் சூரியனும், புதனும் வார ஆரம்பத்தில் பரிவர்த்தனை நிலையிலும், அதன் பிறகு ஒன்று சேர்ந்து யோகங்களை தரக்கூடிய வலுவான நிலையிலும் இருப்பதால் தனுசுக்கு மேன்மைகளை தருகின்ற வாரம் இது. குறிப்பாக ஒன்பது, பத்துக்குடையவர்கள் வலுவாக இருப்பதால் தொழில் மற்றும் வேலை இடங்களில் மறைமுக எதிர்ப்புகள் விலகி நீங்கள் நிம்மதியை பெறுகின்ற வாரமாக இது இருக்கும். 
பெரிய அளவில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள் பணம் எடுத்து போகும்போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம். உடல் நலத்தில் அக்கறை வையுங்கள். பருவவயது மக்களின் மேல் ஒரு கண் இருக்கட்டும். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். மூத்தவர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். சிலருக்கு வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும்.  வேலை தேடும் இளைய பருவத்தினருக்கு விருப்பப்பட்ட அமைப்பில் வேலை கிடைக்கும். உங்களைக் குழப்புவதற்கென்றே சிலர் அருகில் இருப்பார்கள். யாருடைய பேச்சையும் கேட்டு செயல்படாமல் என்றுமே நீங்கள் தனித்தன்மையுடையவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் சுயமாகவே ஒரு முக்கிய முடிவு எடுப்பீர்கள். சிலருக்கு தந்தையின் மருத்துவச்செலவுகள் இருக்கும். 

மகரம்

வாரம் முழுவதும் எட்டுக்குடைய சூரியன் பரிவர்த்தனை நிலையிலும் அதன் பின்னர் பாக்கியாதிபதி புதனுடன் இணைந்து சாதகமற்ற அமைப்பில் இருப்பதால் மகர ராசிக்காரர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். ஏழாம் அதிபதி சந்திரன் வாரம் முழுவதும் பலவீனமான அமைப்பில் இருப்பதால் கணவன்மனைவிக்குள் மூன்றாவது நபரின் தலையீட்டினாலோ, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாத நிலையினாலோ கருத்து வேறுபாடுகள் வரும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். 
ராசியில் கேது அமர்வதால் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் தெளிவான முடிவு எடுப்பதற்கு தயங்குவீர்கள். சிலருக்கு இனம் புரியாத தயக்கங்கள், மனக்கலக்கங்கள் இருக்கும். நண்பர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் சில நெருடல்களும், கருத்து வேறுபாடுகளும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் பொறுத்துப் போவதன் மூலமாக பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.  அரசு தனியார் ஊழியருக்கு வருமானங்கள் சிறப்பாக இருக்கும்.  கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்பு கூடும். நகைகள் சேரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். உங்களில் திருவோண நட்சத்திரக்காரர்கள் எப்போதும், எதிலும் யோசித்து  செயல்படுவீர்கள் என்பதால் உங்களின் வெகுநாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள்.

கும்பம்

வார ஆரம்பத்தில் ஏழு, எட்டுக்குடைய சூரியனும், புதனும் பரிவர்த்தனை நிலையில் இருப்பதும், வார இறுதியில் அஷ்டமாதிபதி புதபகவான் உச்சம் என்கிற சுபத்துவ நிலை அடைவதும் இந்த வாரம் கும்ப ராசிக்கார்ர்களுக்கு தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வருவதும், நீங்களே வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களுக்கு பயணப்படுவதோ அல்லது அவற்றின் மூலமான நன்மைகளை பெறுகின்ற வாரமாகவோ இது இருக்கும்.  ராசியை செவ்வாய் பார்ப்பதால் முணுக்கென்றவுடன் கோபம் வரும் என்பதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள். எதிலும் நிதானமாக இருங்கள். ஆறில் இருக்கும் ராகு நல்ல பலன்களைச் செய்வார். மிக முக்கியமான நபர்களிடமிருந்து இப்போது நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளைப் பெற முடியும். பனிரெண்டில் இருக்கும் கேது இதுவரை தரிசிக்க இயலாத புனிதத்தலங்களை சென்று பார்க்கும் வாய்ப்பினை இப்போது தருவார்.
கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் இந்த வாரம்  ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் மனமகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் உண்டு. பெண்களால் நன்மைகள் இருக்கும். 

மீனம்

வார ஆரம்பத்தில் ஐந்துக்குடைய சந்திரன் ஒன்பதாமிடத்தில் நீசமாகி, சனியுடன் இணைந்து செவ்வாயின் பார்வையை பெறுவதாலும், ஏற்கனவே இருள் கிரகமான ராகு புத்திரஸ்தானமான ஐந்தாமிடத்தில் நிலை கொண்டு இருப்பதாலும் இந்த வாரம் மீனராசிக்காரர்கள் பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்களை அனுபவிக்கின்ற வாரமாக இருக்கும். தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்கிற பழமொழியை மனதில் கொள்பவர்களுக்கு சஞ்சலங்கள் இருக்காது என்பதால் குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். வார ஆரம்பத்தில் ஆறுக்குடைய சூரியன் ராசியைப் பார்த்து உங்களுக்கு டென்ஷன் வரும் விஷயங்களைச் செய்தாலும் ஆறாமிடத்தில் செவ்வாய் வலுப் பெற்று இருப்பதால் வருகின்ற சிறிய பிரச்னைகள் இரண்டு நாட்களில் தீர்ந்து விடும் என்பதால் கவலைப்பட ஒன்றுமில்லை. செவ்வாயின் தயவால் எதிரிகள் ஓடிப் போவார்கள் என்பது உறுதி. சுக்கிரனும் வலுவிழப்பதால் அனைத்துப் பிரச்னைகளும் சூரியனை கண்ட பனிபோல கடைசி நிமிடத்தில் போய் விடும் என்பது நிச்சயம். குடும்பத்துப் பிரச்னைகளில் பொறுத்துப் போவதன் மூலம் நன்மைகள் நடக்க வைக்கலாம் என்பதால் பொறுமை காட்டுங்கள்.. குறுக்குவழி சிந்தனைகள் இப்போது  வேண்டாம். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். சிலருக்கு கடல் தாண்டிப் போகும் வெளிநாட்டுப் பயணங்கள் இருக்கும். டிராவல்ஸ் தொழில் நடத்துபவர்கள், டிரைவர் போன்ற இயக்கும் தொழில் செய்பவர்களுக்கு இந்தவாரம் நன்மைகளைத் தரும்.

Label