OUR CLIENTS
இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி Posted on 25-Sep-2017 இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

இந்தூர், செப்.25
ஆஸ்திரேலியாவுகக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா (71), ரகானே (70), பாண்ட்யா 9) அரைசதம் அடித்து கைகொடுக்க இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரை கைப்பற்றி அசத்தியது. தவிர, இந்த வெற்றியால் இந்தியா 120 புள்ளிகளுடன் ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்து சாதித்தது.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள், 3 ‘டுவென்டி-20’ போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் ஒருநாள் தொடர் நடக்கிறது. இதன் முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. இந்த நிலையில், 3வது போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில்  பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில், ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை. ஆஸி., தரப்பில் கார்ட்ரைட், மாத்யூ வேட் நீக்கப்பட்டு ஆரோன் பின்ச், ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டனர்.

ஆஸி., அணிக்கு வார்னர், ஆரோன் பின்ச் இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர், இந்திய பந்து வீச்சை இருவரும் விளாச ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. ஆரோன் பின்ச் தொடக்கத்திலிருந்தே அதிரடியில் இறங்கி அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன் (13.3 ஓவர்) சேர்த்த நிலையில், பாண்¬யை£ வேகத்தில் வார்னர் கிளீன் போல்டானார். இவர் 42 ரன் (44 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அடுத்த கேப்டன் ஸ்டீட் ஸ்மித் களம் வந்தார். இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய பவுலர்கள் திணறினர். 19.3 ஓவரில் ஆஸி., 100 ரன் எடுத்த போது ஆரோன் பின்ச் அரைசதம் கடந்தார். இவர் 61 பந்தில் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து விளாசிய ஆரோன் பின்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 8வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இவர் 110 பந்தில் சதம் விளாசினார். 35வது ஓவரில் ஆஸி., 200 ரன்¬னை கடந்த போது ஸ்மித் அரைசதம் அடித்தார். இவர் 55 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 154 ரன் சேர்த்த நிலையில், குல்தீப் யாதவ் ‘சுழலில்’ ஆரோன் பின்ச் சிக்கினார். இவர் 124 ரன் (125 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். சாகல் பந்தில் மேக்ஸ்வெவல் (5) நடையை கட்டினார். தொடர்ந்து அசத்திய குல்தீப் யாதவ், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்த ஆட்டம் பரபரப்பானது. ஸ்மித் 63 ரன் (71 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். பின் டிராவிஸ் ஹெட்டுடன் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார்.

முக்கிய கட்டத்தில் அபாரமாக பந்து வீசிய பும்ரா, டிராவிஸ் ஹெட் (4), ஹேண்ட்ஸ்கோம்ப் (3) விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி நேரத்தில் ஸ்டாய்னிஸ் (27*), ஏகார் (9*) கைகொடுக்க ஆஸி., 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன் குவித்தது. இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2, பாண்ட்யா, சாகல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரகானே, ரோகித் சர்மா இருவரும் மிகச் சிறப்பான தொடக்கம் தந்தனர். ஆஸி., பந்து வீச்சை ரோகித் நாலா, புறமும் விளாசினார். இவருக்கு ரகானே கம்பெனி கொடுத்தார். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸி., பவுலர்கள் திணறினர். அதிடரியாக விளையாடிய ரோகித் சர்மா 42 பந்தில் அரைசதம் அடித்தார். இதையடுத்து, 15வது ஓவரில் இந்தியா 1000 ரன் கடக்க ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். தன் பங்கிற்கு ரகானேவும் விளாச 50 பந்தில் அரைசுதம் அடித்து சாதித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 139 ரன் (21.4 ஓவர்) சேர்த்த நிலையில், கூல்டர் நைல் வேகத்தில் ரோகித் சர்மா சரிந்தார். இவர் 71 ரன் (62 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். இவரைத் தொடர்ந்து கம்மின்ஸ் பந்தில் ரகானே, எல்.பி.டபுள்யு., ஆனார். இவர் 70 ரன் (76 பந்து, 9 பவுண்டரி) எடுத்தார்.

முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ஆட்டம் பரபரப்பானது. இந்த நிலையில், கேப்டன் விராத் கோஹ்லியுடன் பாண்டாய் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். 34வது ஓவரில் இந்தியா 200 ரன் கடந்தது. கேப்டன் விராத் கோஹ்லி 28 ரன் எªடுத்த நிலையில் ஏகார் ‘சுழலில்’ சிக்கினார். ரிச்சர்ட்சன் வேகத்தில் ஜாதவ் (2) சரிந்தார். அடுத்து மணிஷ் பாண்டே களம் வந்தார். இந்த நேரத்தில் அதிரடியாக விளையாடிய பாண்ட்யா 45 பந்தில் அரைசதம் விளாச ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 40 ஓவரின் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை  இழந்து 240 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 10 ஓவரில் 54 ரன் தேவை என இருந்தது.

இந்த நிலையில், மணிஷ் பாண்டேவும் விளாச இந்தியாவின் வெற்றி உறுதியானது. வெற்றிக்கு 10 ரன் தேவை என்ற நிலையில், கூல்டர் நைல் வேகத்தில் பாண்ட்யா சரிந்தார். இவர் 78 ரன் (72 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். பலத்த கரகோஷத்திற்கு இடையே தோனி களம் வந்தார். முதல் இரண்டு போட்டியில் சொதப்பிய மணிஷ் பாண்னே, இந்த முறை அசத்த இந்தியா 47.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்து இமாலய வெற்றியை பெற்றதோடு தொடரை கைப்பற்றி அசத்தியது. மணிஷ் பாண்டே 36 (32 பந்து, 6 பவுண்டரி), தோனி 3 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி., தரப்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார். கூல்டர் நைல், ரிச்சர்ட்சன், ஏகார் தலா 1 விக்கெட் சாய்த்தனர். ஆட்டநாயகனாக பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.  இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தயி 3-0 என முன்னிலை பெற்றதோடு தொடரர கைப்பற்றி அசத்தியது. தவிர ஒருநாள் தரவரிசையில் இந்தியா 120 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியது. ஏற்கனவே டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் 4வது ஒருநாள் போட்டி பெங்களூருவில் வரும் 28ம் தேதி நடக்க உள்ளது. 

Label