OUR CLIENTS
கொலை அபாயத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் :துப்பாக்கி உரிமம் வாங்கியதன் பின்னணி மர்மம் என்ன?
கொலை அபாயத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் :துப்பாக்கி உரிமம் வாங்கியதன் பின்னணி மர்மம் என்ன? Posted on 11-Oct-2017 கொலை அபாயத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் :துப்பாக்கி உரிமம் வாங்கியதன் பின்னணி மர்மம் என்ன?

திருச்சி, அக்.11-
திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருப்பவர் வெல்லமண்டி நடராஜன். ஜாக்பாட் அடித்ததுபோல் எம்எல்ஏ ஆகி அமைச்சரும் ஆகிவிட்டார். இவர் அமைச்சராகிவிட்டடதை மாவட்டத்தில் உள்ள பலராலும் ஜீரணிக்க முடியவில்லை. இந்தநிலையில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்துவிட அதிமுக பிளவுபட்டது. அப்போது கடைசி முடிய பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எல்லோரும் எப்பக்கம் நின்றார்களோ அப்பக்கமே நின்று நிலைத்து வருகிறார் வெல்லமண்டி நடராஜன்.

இந்த நிலைமையில்தான் எப்படியும் தன்னை திருச்சி மாவட்டத்தில் யாரும் அசைக்க முடியாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்து வருகிறார். சகட்டு மேனிக்கு அனைவரையும் தாக்கி வருகிறார் வெல்லமண்டி நடராஜன். ஒரு கட்டத்தில் இதனால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பயந்து அவசரகதியில் துப்பாக்கி உரிமம் வேறு வாங்க முயற்சியில் ஈடுபட்ட அமைச்சர், அது சம்மந்தமான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டாராம். அமைச்சர் துப்பாக்கி உரிமம் வாங்கும் அளவுக்கு அப்படி என்ன அவர் உயிருக்கு ஆபத்து வந்தது என விசாரணை  நடத்தினால் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது. முதன் முதலில் பிரச்னை என்று ஆரம்பமானது திருச்சி சர்க்யூட் ஹவுஸ்தான். அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்று வர, அது பிறகு நேர்முக உதவியாளரான சக்திவேல் மீது அந்த குற்றச்சாட்டு திரும்ப இந்த குற்றச்சாட்டை சுமத்திய ஒரு பெண் போலீசும் அவர் காதலரையும் அப்படியே அமுக்கியது அமைச்சர் தரப்பு. அதற்கு முன்பே அமைச்சரின் நேர்முக உதவியாளர் சக்திவேலை அடி வெளுத்துவிட்டாராம் அந்த பெண் போலீசின் காதலர்.

இந்த பிரச்னையில் அமைச்சரின் கார் ஓட்டுநர் கூட மாற்றப்பட்டார். பெண் போலீசின் காதலருக்கு பத்து லட்சம் பணம் கூட கைமாறியதாம். இதனால் அந்த காதலர் பணத்தை வாங்கினாலும் கொந்தளிப்பில் உள்ளாராம். அவர் மூலம்கூட  ஆபத்து வர வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறாராம் அமைச்சர். அதேபோல் சமீபத்தில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி ஒன்றில் ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாவும், தினகரனும்தான் காரணம். எங்களை யாரையுமே அப்பல்லோ மருத்துவமனைக்கு உள்ளேயே அனுமதிக்கவில்லை. அதிமுவில் உறுப்பினராககூட இல்லாத தினகரன் எங்களை  நீக்குவேன் என்று கூறி வருகிறார். வெகுவிரைவில் அவர் மாமியார் வீட்டுக்கு செல்லும் காலம் அவருக்கு வரப்போகிறது என்று தினகரனை வெளுத்து வாங்கியிருக்கிறார். அதேபோல் தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் கொறடா மனோகரனை, பர்மாவில் இருந்து வந்து கோடி கோடியாக மண்ணச்சநல்லூர் வரை சொத்து சேர்த்த மனோகரன், என்னை கணக்கு பிள்ளை என்கிறான். பர்மாவில் இருந்து வந்தவன் சொத்து சேர்க்கலாம். கணக்கு பிள்ளை நான் சொத்து சேர்க்க கூடாதா என்றும் முன்னாள் துணை மேயர் சீனிவாசனை தயாநிதி மாறனுடன் தொடர்புபடுத்தியதால் ஒட்டுமொத்த தினகரன் தரப்பும் கடுப்பில் இருப்பதால் அவர்கள் யார் மூலமாவது தனக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் பயந்துள்ளாராம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

அதேபோல் அமைச்சரின் நேர்முக உதவியாளர் சக்திவேல் ஏற்கனவே அமைச்சர் சண்முகநாதனின் நேர்முகஉதவியாளராக இருந்திருக்கிறார். இவர் ஒரு பெண் பித்தர் என்கிறார்கள். 

ஆகையால் சக்திவேல், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை மறைமுகமாக பெண் மயக்கத்தில் வீழ்த்தி வருகிறாராம். இதனால் அமைச்சருக்கு பெண்களாலும் ஆபத்து வர வாய்ப்பிருக்கிறது. இப்படி பல எதிர்ப்புகளால்தான் அமைச்சர் துப்பாக்கி உரிமம் எடுத்ததாக அமைச்சர் தரப்பினரே சொல்கிறார்கள். திருச்சி முழுவதும் இப்பொழுது இதுதான் ஒரே பேச்சு... அமைச்சரை முதலில் கொல்லப்போவது யார் என்பதுதான்!. 

Label