OUR CLIENTS
அனுமதியின்றி முதல்வரை வாழ்த்தி விளம்பர பலகைகள் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அனுமதியின்றி முதல்வரை வாழ்த்தி விளம்பர பலகைகள் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு Posted on 12-Oct-2017 அனுமதியின்றி முதல்வரை வாழ்த்தி விளம்பர பலகைகள் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக்.12-
சேலத்தில் முதல்வரை வாழ்த்தி விளம்பர பலகைகள் வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் கூறி இருப்பதாவது: சேலத்தில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு சட்டவிரோதமாக 200-க்கும் மேற்பட்ட பேனர்கள் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டது.  பேனர் அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் அவை மீறப்பட்டுள்ளன.

முதல்வர், அமைச்சர்கள் என அரசியல் பிரமுகர் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சிக்காக அவர்களை வாழ்த்தி கட்சிகாரர்கள் பேனர்கள் வைக்கின்றனர். இந்த பேனர்களை அமைக்க எந்த அனுமதியும் பெறவில்லை, மாறாக இந்த பேனர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்களை வாழ்த்தி கட்சி பிரமுகர்கள் சட்ட விரோதமாக அமைக்கும் பேனர்களை தமிழக முதல்வர், அமைச்சர்களும் ஊக்கப்படுத்துகின்றனர்.

முதல்வர் விழாவிலேயே இதுபோன்ற பேனர்கள் வைக்கப்படுவதால் காவல்துறையினரும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க அச்சப்படுகின்றனர். எனவே இதுபோன்று சட்டவிரோத பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் வரும் 26-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

Label