OUR CLIENTS
பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் இன்று சந்திப்பு
பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் இன்று சந்திப்பு Posted on 12-Oct-2017 பிரதமர் மோடியுடன்  ஓபிஎஸ் இன்று சந்திப்பு

சென்னை, அக்.12-
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

இரு அணிகள் இணைப்புக்கு முன், ஓ.பி.எஸ். மோடியை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் இரு அணிகள் இணைந்து பொதுக்குழு, பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின், முதன்முறையாக அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். புதனன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இன்று காலை 11 மணிக்கு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.பி. மைத்ரேயனும் துணை முதல்வருடன் செல்கிறார். பல்வேறு அரசியல் சூழலில் துணைமுதல்வர் ஓபிஎஸ் & பிரதமர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Label