OUR CLIENTS
அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு Posted on 12-Oct-2017 அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்  : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, அக்.12-
குடியரசு தின விழாவின்போது வழங்கப்படும் அண்ணா பதக்கம் மற்றும் கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.   ரூ.1,00,000க்கான  காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். 

வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.
2018ம் ஆண்டுக்கான பதக்கத்திற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக அரசு முதன்மைச் செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை&600009  என்ற முகவரிக்கு 15.12.2017&க்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.  

இதேபோல், சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கும் தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள்  இதற்கு விண்ணப்பிக்க முடியாது. இந்த விருதுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக தலைமைச்செயலக முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Label