OUR CLIENTS
அரசு மருத்துவமனைகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை
அரசு மருத்துவமனைகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை Posted on 12-Oct-2017 அரசு மருத்துவமனைகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை

சென்னை, அக்.12-
எழும்பூர் மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். 

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் கொசுவலை, படுக்கை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். பிறந்த குழந்தையை கழுவுவது உள்ளிட்ட பணிகளுக்குக் கூட தண்ணீர் இல்லாத நிலை நிலவுவதாக தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Label