OUR CLIENTS
சரக்கு மற்றும் சேவை வரியால் அரசுக்கு மாதம் ரூ. 40 கோடி இழப்பு
சரக்கு மற்றும் சேவை வரியால் அரசுக்கு மாதம் ரூ. 40 கோடி இழப்பு Posted on 13-Oct-2017 சரக்கு மற்றும் சேவை வரியால் அரசுக்கு மாதம் ரூ. 40 கோடி இழப்பு

புதுச்சேரி, அக். 13-
புதுவை முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியதால் அரசுக்கு மாதம் ரூ. 40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியினால் ஏற்படும் இழப்பை தருவதாக உறுதி அளித்துள்ளது. மத்திய அரசின் இழப்பீட்டு தொகை 5 ஆண்டுகளுக்கு கிடைக்கும்.

இந்த இழப்பீட்டு தொகையை 2 மாதங்களுக்கு ஒரு முறை புதுவை அரசுக்கு வழங்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். அரசின் வருவாயை பெருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுவைக்கும், கேரள அரசுக்கும் ஏற்கனவே மின்சாரம் வாங்குவதில் ஒப்பந்தம் உள்ளது.

அதன் விலையை ரூ.3.50-ல் இருந்து ரூ.5.20 ஆக உயர்த்தி விட்டனர். இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம். மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் பெற அனுமதி கிடைத்துள்ளது. இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Label