OUR CLIENTS
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு Posted on 16-Oct-2017 டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

புதுடெல்லி, அக். 16-
தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் போதுமான அளவு இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.

டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் திருநாவுக்கரசர் சனிக்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் உடன் இருந்தார். இச்சந்திப்புக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்களைத் தவிர, அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் விவசாயிகள், மாணவர்கள், தொழி லாளர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகின்றனர்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். நாள்தோறும் டெங்குவால் உயிரிழப்போர் குறித்த செய்திகள் வெளியாகின்றன. தமிழகத்தில் டெங்கு நோய் தாக்குதல் ஏற்பட்டு 3 மாதங்கள் ஆகியும், மத்திய அரசின் குழு வெள்ளிக்கிழமைதான் பார்வையிட்டுள்ளது. தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசின் சார்பிலோ, தமிழக அரசின் சார்பிலோ எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் போதுமானஅளவு இல்லை.

ஜெயலலிதா மரணத் துக்குப் பிறகு தமிழக மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு, பாஜகவின் பினாமி அரசாக செயல்பட்டு வருகிறது. ஆட்சியில் உள்ளவர்கள் தங்களையும், தங்கள் பதவிகளையும் காப்பாற்றிக் கொள்ளவே டெல்லிக்கு வருகின்றனர். தமிழக நலனுக்காக யாரும் தில்லிக்கு வருவதில்லை. அதிமுக பலவீனமடைந்துள்ளது. டிடிவி தினகரனுடனோ, அதிமுகவுடனோ கூட்டணி சேரமாட்டோம் என்றார் அவர். 

ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் கூறுகையில், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப் படவுள்ளார். அதற்காக அவரை சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்கவும், தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிக்கவும் வந்தோம். தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்திலிருந்து தில்லி வந்து பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை தமிழத்தின் துணை முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், மின்துறை அமைச்சர் உள்ளிட்டோர் சந்திக்கின்றனர். தமிழக நலனுக்காக அவர்கள் இங்கு வருவதில்லை' என்றார்.

Label