OUR CLIENTS
ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி விரும்பினால் மீண்டும் போட்டியிடுவேன்
ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி விரும்பினால் மீண்டும் போட்டியிடுவேன் Posted on 16-Oct-2017 ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி விரும்பினால்  மீண்டும் போட்டியிடுவேன்

ராயபுரம், அக். 16-
தண்டையார்பேட்டை, நேதாஜிநகர், வினோபா நகர், ராஜீவ்காந்தி நகர், பட்டேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம், குப்பைகளை அகற்றவும், தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்றவும், எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயை தூர்வாரவும் கேட்டுக் கொண்டார்.

அப்போது மதுசூதனன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டால், துணை முதல் அமைச்சர் விரும்பினால் மீண்டும் நான் போட்டியிடுவேன். அல்லது கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்காக கழக பணியாற்றுவேன். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஸ்டாலினே போட்டியிட்டாலும் சந்திக்கத் தயார்.

தினகரன் மீண்டும் போட்டியிட்டால் அவரது நிலை என்ன என்று உங்களுக்கே தெரியும். டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை ஒப்பந்த ஊழியர்கள் சரிவர செய்யவில்லை. அவர்கள் சரிவர பணி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தினகரனுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் பெங்களூர் புகழேந்தி, கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர். விரைவில் அவர் மீது சி.பி.ஐ. விசாரணை பாயும். இவ்வாறு அவர் கூறினார். 
அப்போது வட சென்னை வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், ஜனார்த்தனன் உடன் இருந்தனர்.

Label