நிலவேம்பு குறித்த ஆய்வு இப்பொழுது தேவை இல்லை - கமலுக்கு இல.கணேசன் பதில் Posted on 20-Oct-2017
மதுரை, அக். 20-
பா.ஜ.க. தேசியக்குழு உறுப்பினர் இல. கணேசன் மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்குவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பும் முக்கியமானது. வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காக நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார்.
டெங்குவை ஒழிக்க அனைவரும் போராடி வரும் நிலையில் நிலவேம்பு குறித்து ஆராயத் தேவையில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அனேகமாக மதுரையில் அமைய வாய்ப்பு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கிப்பட்டியை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்பது குழப்பமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.